spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

-

- Advertisement -

Rain

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பில் தெரிவித்திருந்தது.

கனமழைக்கு வாய்ப்பு

இந்நிலையில் தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோவை, நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ