நடிகர் விஜய் லியோ திரைப்படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க சித்தார்த்தா நுனி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இதற்கு இசை அமைக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க அவருடன் இணைந்து சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த் ,பிரபுதேவா, மைக் மோகன் என பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் படமானது 2024 செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையிட முழு வீச்சில் தயாராகி வருகிறது. அந்த வகையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் படத்தின் அடுத்த அடுத்த போஸ்டர்களும், க்ளிப்ஸ் வீடியோவும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் விஜய் குரலில் வெளியான முதல் இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில்தான் தி கோட் படத்தின் மூன்றாவது பாடல் வருகின்ற ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகும் என புதிய அப்டேட் கிடைத்துள்ளது. மேலும் ஏற்கனவே வெளியான தகவலின் படி இந்த பாடல் விஜய் த்ரிஷா இருவரும் நடனமாடிய குத்து பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த பாடல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
- Advertisement -


