பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அந்தகன். இந்த படமானது இந்தியில் வெளியான அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட இந்த படத்திற்கு தமிழ் மொழியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இருப்பினும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்து நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. சமீபத்தில் தான் நீண்ட வருட காத்திருப்பு முடிவுக்கு வந்தது போல் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை பட குழுவினர் வெளியிட்டனர். அதன்படி இந்த படமானது 2024 ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் படத்தின் டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே இதன் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாக தொடங்கின.
இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த பாடல் வருகின்ற ஜூலை 24ஆம் தேதி வெளியாகும் எனவும் அதனை நடிகர் விஜய் வெளியிடப் போவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் பிரசாந்த் விஜயுடன் இணைந்து தி கோட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்குப் பிறகு விஜய், பிரசாந்த் இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டனர் என்பதனால் இதன் அடுத்த பாடலை விஜய் வெளியிடப் போகிறாராம். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.
அந்தகன் திரைப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கி, தயாரித்து, திரைக்கதை எழுதியிருக்கிறார். இந்த படத்தில் பிரசாந்த் தவிர சிம்ரன், சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


