பாலசரவணன் நடிக்கும் பேச்சி படத்தின் டிரைலர் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது.
நகைச்சுவை நடிகரான பால சரவணன் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது புதிய படம் ஒன்றில் ஹீரோவாக உருவெடுத்து இருக்கிறார். அந்த வகையில் பால சரவணன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படத்திற்கு பேச்சி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பால சரவணன் உடன் இணைந்து காயத்ரி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தை ராமச்சந்திரன் என்பவர் எழுதி இயக்கி இருக்கிறார். ராஜேஷ் முருகேசன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பார்த்திபன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.
ஹாரர் கலந்த கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ஆரம்பத்தில் ஜூலையில் வெளியிட திட்டமிடப்பட்டது. பின்னர் ஒரு சில காரணங்களால் வருகின்ற ஆகஸ்ட் 2ஆம் தேதி திரையிடப்பட இருக்கிறது. இதற்கிடையில் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் டிரைலரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த ட்ரெய்லரில் அமானுஷ்ய காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த ட்ரெய்லர் ரிலீஸாகி ஒரு வாரத்திற்கு பின்னர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.