- Advertisement -
தலைக்கணமில்லா தமிழ் மைந்தனே என முன்னாள் முதல்வர் கலைஞரை புகழ்ந்து பேசிய அரசுப்பள்ளி மாணவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கலைஞர் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடும் வகையில் மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பேச்சு போட்டி, கவிதை, கட்டுரை என போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது.
மதுரை கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட கார்சேரி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பற்றி மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவி சாக்சிகா தலைக்கணமில்லா தமிழ் மைந்தனே என பேசினார்.
மூன்றாம் வகுப்பு மாணவி பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.