spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகலைத்தாயின் இளையமகன் நீர்.... 'வீர தீர சூரன்' பட இயக்குனரை புகழ்ந்த எஸ்.ஜே. சூர்யா!

கலைத்தாயின் இளையமகன் நீர்…. ‘வீர தீர சூரன்’ பட இயக்குனரை புகழ்ந்த எஸ்.ஜே. சூர்யா!

-

- Advertisement -

தங்கலான் படத்திற்குப் பிறகு விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் வீர தீர சூரன். இந்தப் படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ் யு அருண்குமார் இயக்குகிறார். கலைத்தாயின் இளையமகன் நீர்.... 'வீர தீர சூரன்' பட இயக்குனரை புகழ்ந்த எஸ்.ஜே. சூர்யா!இந்த படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து சுராஜ் வெஞ்சரமூடு, சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கலைத்தாயின் இளையமகன் நீர்.... 'வீர தீர சூரன்' பட இயக்குனரை புகழ்ந்த எஸ்.ஜே. சூர்யா!சியான் விக்ரமின் 62 ஆவது படமான இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெளியானது. அதைத் தொடர்ந்து படப்பிடிப்புகள் தென்காசி, மதுரை போன்ற பகுதிகளில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் எஸ் ஜே சூர்யாவின் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டிருந்தனர். அந்த போஸ்டரின் மூலம் எஸ்.ஜே சூர்யா இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது தெரியவந்தது. இந்நிலையில் நடிகர் எஸ் ஜே சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் இயக்குனர் அருண்குமாரை பாராட்டி பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “நேற்று இரவு மதுரையில் விக்ரமுக்கும், சுராஜுக்கும், எனக்கும் இடையிலான காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அதற்கு முன் அந்த காட்சியை அதே இடத்தில் இயக்குனர் அருண்குமார் மற்றும் உதவியாளர்கள் சிலர் 10 நாட்கள் ஒத்திகை பார்த்தார். அதன் பிறகு எங்களை அழைத்து வந்து மூன்று நாட்கள் ஒத்திகை பார்த்தார். தற்போது அதிகாலை 5.05 மணி அளவில் அவர் நினைத்ததை செய்துவிட்டார். இயக்குனரைப் பற்றி ஒன்றே ஒன்று நான் சொல்ல வேண்டும். கலைத்தாயின் இளையமகன் ஐயா நீர் ( நீங்கள்). படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ