spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"பெண் காவலர்களுக்கு மகப்பேறு விடுப்பு - முதலமைச்சர் அறிவிப்பு விடிவெள்ளியாய் அமைந்துள்ளது" - திமுக எம்.பி....

“பெண் காவலர்களுக்கு மகப்பேறு விடுப்பு – முதலமைச்சர் அறிவிப்பு விடிவெள்ளியாய் அமைந்துள்ளது” – திமுக எம்.பி. கனிமொழி

-

- Advertisement -

மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்கள்,  3 ஆண்டுகளுக்கு சொந்த மாவட்டத்தில் பணியைத் தொடரலாம் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு திமுக எம்.பி. கனிமொழி நன்றி தெரிவிள்ளார்.

இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டு உள்ள வலைதள பதிவில், காவல்துறையில் மகளிர் பங்காற்றத் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததன் பொன்விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மகப்பேறு சமயங்களில் விடுப்பு இல்லாமல் பல இக்கட்டுகளுக்கு உள்ளான பெண் காவலர்களுக்கு, மகப்பேறு விடுப்பு ஓராண்டுக்கு உயர்த்தப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு விடிவெள்ளியாய் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

we-r-hiring

kanimozhi

மேலும், மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்கள், குழந்தையைப் பராமரிக்கும் வகையில் 3 ஆண்டுகளுக்குக் கணவர் அல்லது பெற்றோர் வசிக்கக் கூடிய மாவட்டங்களில் பணியைத் தொடரலாம் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்

MUST READ