spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதெறிக்கவிடும் விஜய்.... 'கோட்' படத்தின் நான்கு நாள் வசூல் அப்டேட்!

தெறிக்கவிடும் விஜய்…. ‘கோட்’ படத்தின் நான்கு நாள் வசூல் அப்டேட்!

-

- Advertisement -

நடிகர் விஜய் தற்போது நடிகராகவும் அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார்.தெறிக்கவிடும் விஜய்.... 'கோட்' படத்தின் நான்கு நாள் வசூல் அப்டேட்! இவரது நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி கோட் என்று சொல்லப்படும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. திரையிடப்பட்ட முதல் நாளில் இருந்தே விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் பட்டைய கிளப்பி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே முதல் நாளில் 126 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் 4 நாட்களில் உலகம் முழுவதும் இப்படம் 288 கோடி வரை வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் பலரும் நடிகர் விஜயை கொண்டாடி தீர்த்து வருவதோடு கோட் திரைப்படத்தினை தளபதி திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.தெறிக்கவிடும் விஜய்.... 'கோட்' படத்தின் நான்கு நாள் வசூல் அப்டேட்!

அழகிய தமிழ் மகன் படத்திற்கு பிறகு இரட்டை வேடங்களில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்திருந்தார் விஜய். அதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகாவும் மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரியும் நடித்திருந்தனர். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ