- Advertisement -
சென்னை கிண்டி மற்றும் புறநகர் நகர் பகுதிகளில் மின்சார ரயிலில் அடிபட்டு 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை வண்டலூர் மற்றும் பெருங்களத்தூர் ரயில் நிலையம் இடையே மின்சார ரயிலில் அடிபட்டு பீகாரை சேர்ந்த பப்பு குமார் என்ற 30 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல், பொத்தேரி ரயில் நிலையம் அருகே ரயில் மோதி விழுப்புரத்தை சேர்ந்த ராமு என்பவர் உயிரிழந்தார்.


இதேபோல், கிண்டி ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மின்சார ரயில் மோதி உயிரிழந்தார். 3 விபத்துக்கள் குறித்தும் ரயில்வே போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
