Homeசெய்திகள்சென்னைஆவின் பாலில் கரப்பான் பூச்சி: வேளச்சேரியில் அதிர்ச்சி சம்பவத்தால் வாடிக்கையாளர்கள் பீதி!

ஆவின் பாலில் கரப்பான் பூச்சி: வேளச்சேரியில் அதிர்ச்சி சம்பவத்தால் வாடிக்கையாளர்கள் பீதி!

-

- Advertisement -

சென்னை வேளச்சேரியில் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வாங்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டிற்குள் கரப்பான் பூச்சி கிடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கரப்பான் பூச்சி

we-r-hiring

மூன்று நாட்கள் கழித்து திறந்தபோது அதிர்ச்சி:

சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர், கடந்த 15-ஆம் தேதி ஆன்லைன் செயலி மூலமாக ஆவின் பால் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். தொடர்ந்து அந்த பால் பாக்கெட்டை கடந்த 18-ஆம் தேதி பயன்படுத்தத் திறந்து பார்த்தபோது, அதற்குள் கரப்பான் பூச்சி ஒன்று இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். ஆவின் பாக்கெட்டுக்குள் கரப்பான் பூச்சி மிதக்கும் காட்சிகளை அவர் தனது அலைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பெற்றோர்களின் கவலை:

இதுகுறித்து வீடியோவில் பேசியுள்ள சதீஷ், “எனக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. பொதுவாகக் குழந்தைகளுக்கு பசுவின் பாலை அறிமுகப்படுத்த நினைக்கும் பெற்றோருக்கு, ஆவின் போன்ற அரசு பொதுத்துறை நிறுவனத்தின் தயாரிப்பிலேயே இது போன்ற தூய்மையற்ற சம்பவங்கள் நடப்பது பெரும் கேள்விக் குறியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது” என மனவேதனையுடன் தெரிவித்துள்ளார். உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும், ஆவின் நிர்வாகமும் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, பால் பாக்கெட் விநியோகம் மற்றும் தூய்மை பராமரிப்பில் உரிய ஆய்வு நடத்த வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

MUST READ