Homeசெய்திகள்சென்னைசென்னை எத்திராஜ் கல்லூரி அருகே பர பரப்பு: தரைக்குக் கீழே காத்திருந்த ஆபத்து – ஒரே...

சென்னை எத்திராஜ் கல்லூரி அருகே பர பரப்பு: தரைக்குக் கீழே காத்திருந்த ஆபத்து – ஒரே இடத்தில் 19 நாகப்பாம்பு குட்டிகள் மீட்பு!

-

- Advertisement -

மீதமுள்ள 20 குட்டிகளைப் பிடிக்க 2-வது நாளாக தீவிரத் தேடுதல் வேட்டையில் வனத்துறை சென்னை எழும்பூர் எத்திராஜ் கல்லூரி அருகே உள்ள குடியிருப்பு ஒன்றில், தரைக்குக் கீழே மறைந்திருந்த 19 நாகப்பாம்பு குட்டிகளை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டுள்ளனர். மீதமுள்ள 20 குட்டிகளைத் தேடும் பணி 2-வது நாளாக தீவிரமடைந்துள்ளது.சென்னை எத்திராஜ் கல்லூரி அருகே பர பரப்பு: தரைக்குக் கீழே காத்திருந்த ஆபத்து – ஒரே இடத்தில் 19 நாகப்பாம்பு குட்டிகள் மீட்பு!

சந்தேகத்தை ஏற்படுத்திய முட்டைகள்
எத்திராஜ் கல்லூரி அருகே உள்ள ஒரு வீட்டின் பின்புறம் நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்படாமல் கிடந்துள்ளது. நேற்று மதியம் அந்தப் பகுதியைச் சுத்தம் செய்த வீட்டின் உரிமையாளர், சந்தேகத்திற்கிடமான வகையில் சில முட்டைகள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து கிண்டி வனத்துறை மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

we-r-hiring

39 முட்டைகள் பொரிப்பு
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை ஊழியர்கள், அந்த இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது தரைக்குக் கீழே 39 நல்ல பாம்பு முட்டைகள் பொரிந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவை அனைத்தும் ஓரிரு நாட்களுக்கு முன்புதான் பொரித்திருக்க வேண்டும் என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

4 மணி நேரத் தேடுதல் வேட்டை
பொரித்த முட்டைகளின் எண்ணிக்கையைக் கண்டு அதிர்ச்சியடைந்த வனத்துறையினர், பாம்பு குட்டிகள் அங்கேயே தங்கியிருக்கலாம் எனச் சந்தேகித்தனர். இதையடுத்து, பயன்பாடற்ற அந்தப் பகுதியின் கான்கிரீட் பிளவுகளைத் தோண்டி எடுத்துத் தேடத் தொடங்கினர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தத் தீவிர தேடுதல் நடவடிக்கையின் முடிவில், ஒன்றன்பின் ஒன்றாக 19 நாகப்பாம்பு குட்டிகள் உயிருடன் மீட்கப்பட்டன.

செங்கல்பட்டு காட்டில் விடுவிப்பு
இரவு நேரம் ஆகிவிட்டதால், மீதமுள்ள குட்டிகளைத் தேடும் பணியில் சற்று சுணக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, முதற்கட்டமாக மீட்கப்பட்ட 19 நல்ல பாம்பு குட்டிகளையும் பாதுகாப்பான பெட்டிகளில் அடைத்த வனத்துறையினர், அவற்றைச் செங்கல்பட்டு காப்புக் காட்டுப் பகுதிக்குக் கொண்டு சென்று பத்திரமாக விடுவித்தனர்.

தாய் பாம்பு ஏற்கனவே மீட்பு
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “சுமார் 10 நாட்களுக்கு முன்பாக இதே வீட்டில் சுமார் 5 அடி நீளமுள்ள பெரிய பெண் நாகப்பாம்பு ஒன்றைப் பிடித்துக் காட்டிற்குள் விட்டோம். தற்போது மீட்கப்பட்டுள்ள குட்டிகள் அனைத்தும் அந்தப் பெண் பாம்பு இட்ட முட்டைகளில் இருந்து வெளிவந்தவைதான்” என்று தெரிவித்தனர்.

இன்றும் தொடரும் தேடுதல் பணி
மொத்தம் 39 முட்டைகள் பொரிந்துள்ள நிலையில், நேற்று 19 குட்டிகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. எனவே, மீதமுள்ள 20 பாம்பு குட்டிகள் அதே வீட்டின் தரைக்கு அடியிலோ அல்லது அருகில் உள்ள இடுக்கிலோ மறைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதனால், அப் பகுதி மக்களின் பாதுகாப்பைக் கருதி, 2-வது நாளாக இன்றைக்கும் எஞ்சிய 20 பாம்பு குட்டிகளை மீட்கும் தீவிரத் தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிபதியிடம் மாட்டிய 19 வீடியோக்கள்! தேர்தலை ரத்து செய்யக் கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் தீவிர விசாரணை!

MUST READ