Homeசெய்திகள்சென்னைநீதிபதியிடம் மாட்டிய 19 வீடியோக்கள்! தேர்தலை ரத்து செய்யக் கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் தீவிர விசாரணை!

நீதிபதியிடம் மாட்டிய 19 வீடியோக்கள்! தேர்தலை ரத்து செய்யக் கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் தீவிர விசாரணை!

-

- Advertisement -

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தேர்தல் முறைகேடு வழக்கு ஒன்று, மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் அமர்வில் தீவிர விசாரணைக்கு வந்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகாரில், 19 வீடியோ ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்திய விவகாரம்!

கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரத்திற்காகச் சிறு குழந்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் கடுமையான விதிகள் மீறப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, தவெக (TVK) தரப்பில் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாள்களில் குழந்தைகளைக் கொண்டு உணர்ச்சிகரமாகப் பேச வைக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தில்லி குழந்தைகள் பாதுகாப்பு நலவாரியத்திற்கு அனுப்பப்பட்ட புகாரில், பல குழந்தைகள் ஒரே மாதிரியான ஸ்கிரிப்டுடன் அழுதுகொண்டு வாக்குக் கேட்ட 19 வீடியோ ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுகுறித்து உரிய பிரமாணப் பத்திரம் (Affidavit) தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றத்தில் விஜய் தரப்பு விளக்கம் என்ன?

வழக்கின் விசாரணை கடந்த மே மாதத்தில் இருந்து நடைபெற்று வரும் நிலையில், நீதிமன்றத்தின் தொடர்ச்சியான எச்சரிக்கைகளைத் தொடர்ந்து விஜய் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், குழந்தைகளைக் கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டதற்கும் தங்களது வெற்றிக்கும் நேரடியான தொடர்பு இல்லை என்றும், அதற்குரிய எந்தவொரு முறையான மெட்டீரியல் ஆதாரமும் எதிர்தரப்பிடம் இல்லை என்றும் வாதிடப்பட்டுள்ளது.

எனினும், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், “குழந்தைகள் அடம் பிடித்து விசிலுக்கு ஓட்டு போட வைக்க வேண்டும்” என்று பொதுவெளியில் பேசியதாகக் கூறப்படும் வீடியோக்களையும், தேர்தல் வெற்றிக்குப் பிறகு குழந்தைகள் மற்றும் விர்ச்சுவல் வாரியர்ஸுக்கு நன்றி தெரிவித்து அவர் வெளியிட்ட பதிவுகளையும் மனுதாரர்கள் தரப்பு ஆதாரங்களாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அதிரடி விதிகள்!

குழந்தைகளைத் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்துவது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி (Election Symbols Reservation and Allotment Order 1968) கடுமையான குற்றமாகும். இந்த விதிகளை மீறும் கட்சிகள் அல்லது வேட்பாளர்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படலாம் அல்லது சஸ்பென்ட் செய்யப்படலாம் என்ற கடுமையான விதிகளும் நடைமுறையில் உள்ளன.

இந்த வழக்கு இந்திய தேர்தல் வரலாற்றிலேயே மிக முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படும் நிலையில், இது குறித்த இறுதி விசாரணை வரும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி லட்சுமிநாராயணன் தலைமையிலான அமர்வு இந்த வழக்கில் என்ன மாதிரியான அதிரடித் தீர்ப்பை வழங்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் உச்சத்தை எட்டியுள்ளது.

சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல 54-வது ஆண்டு பெருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடக்கம்!

MUST READ