Homeசெய்திகள்தமிழ்நாடுபிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

-

- Advertisement -

பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஜவஹர்லால் நேருவை விமர்சனம் செய்வதற்கு மோடிக்கு தகுதியில்லை

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி பிரதமர் மோடிக்கு, பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள்,  திரைப் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

"தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டுப் பொய்களால் மறைக்க முயற்சிக்கலாமா?"- பிரதமருக்கு டி.ஆர்.பாலு எம்.பி. சரமாரி கேள்வி!

இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார். மேலும், வரும் ஆண்டுகளில் நீண்ட ஆயுளுடனும், நீடித்த ஆரோக்கியத்துடனும் இருக்க வாழ்த்துவதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ