spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிருச்சியில் தப்பியோட முயன்ற ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறையினர்

திருச்சியில் தப்பியோட முயன்ற ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறையினர்

-

- Advertisement -

திருச்சி ஸ்ரீரங்கத்தில் போலீசாரை ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற ரவுடி ஜம்புகேஸ்வரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் என்பவர் நேற்று தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, மர்மநபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் கடந்த 2020ஆம் நடைபெற்ற ரவுடி தலைவெட்டி சந்துரு கொலைக்கு பழிக்குப்பழியாக நடைபெற்றது தெரியவந்தது.

we-r-hiring

chennai gun shooting

இதனிடையே கொலையில் கைதான ரவுடி ஜம்புகேஸ்வரை விசாரணைக்காக காவிரிக் கரை பகுதிக்கு போலிசார் கூட்டி சென்றனர். அப்போது, ஜம்புகேஸ்வர் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் போலிசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார். இதில் காவல் ஆய்வாளர் வெற்றிவேல், உதவி ஆய்வாளர் ராஜகோபால், சிறப்பு ஆய்வாளர் செந்தில் காவலர் சதீஷ், உள்ளிட்டோர் காயமடைந்தனர்.இதனை அடுத்து, போலிசார் தற்காப்புக்காக ஜம்புகேஸ்வரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.

தொடர்ந்து காயம் அடைந்த ஜம்புகேஸ்வர் மற்றும் காவலர்கள் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வரும் காவலர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்தார்.

MUST READ