Homeசெய்திகள்தமிழ்நாடுஈரோட்டில் விடிய விடிய களைகட்டியது ஜவுளி சந்தை

ஈரோட்டில் விடிய விடிய களைகட்டியது ஜவுளி சந்தை

-

- Advertisement -

ஈரோட்டில் விடிய விடிய களைகட்டியது ஜவுளி சந்தை

ஈரோட்டில் இடைத்தேர்தல் விதிமுறைகளால் களையிழந்து காணப்பட்ட ஜவுளி சந்தை, மீண்டும் அண்டை மாநில வியாபாரிகள் வருகையால், நேற்று விடிய விடிய வர்த்தகம் களைகட்டியது.

ஈரோடு வாராந்திர ஜவுளி சந்தைக்கு வியாபாரிகள் வருகை

தென்னிந்திய அளவில் ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு புகழ்பெற்ற ஈரோட்டில் வாரந்தோறும் திங்கள் இரவு முதல் செவ்வாய் மாலை வரை வாராந்திர ஜவுளி சந்தை நடைபெறும். ஆனால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காரணமாக, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்துச்செல்ல கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. இதனால், கடந்த சில வாரங்களாக களையிழந்து காணப்பட்ட ஈரோடு ஜவுளிச்சந்தை, தேர்தல் முடிந்ததால் மீண்டும் களைகட்டியுள்ளது. கேரள, கர்நாடகா மற்றும் உள்ளூர் வியாபாரிகள் குவிந்தனர்.

we-r-hiring
அண்டை மாநில ஜவுளி வியாபாரிகள் வருகை அதிகரிப்பு

இந்த வாரம் வெளிமாநில வியாபாரிகளின் வருகையால் நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக, ஈரோடு வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.

MUST READ