spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுநடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வெற்றி நிச்சயம்- ரஹானே

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வெற்றி நிச்சயம்- ரஹானே

-

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வெற்றி நிச்சயம்- ரஹானே

முதல்முறையாக சிஎஸ்கே அணிக்கு விளையாட உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக கிரிக்கெட் வீரர் ரஹானே தெரிவித்துள்ளார்.

Ajinkya Rahane | Indian Cricketer | Batsman I Cricketfile

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தனியார் பள்ளி இணைந்து திருச்சியில் கிரிக்கெட் அகாடமி திறக்கப்பட்டது. அதன் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்கியா ரகானே கலந்துகொண்டார்.

we-r-hiring

தொடர்ந்து விழாவில் பேசிய ரஹானே, “சிறிய ஊர்களில் கிரிக்கெட் அகாடமி தொடங்குவதால் சிறந்த வீரர்கள் இதன் வாயிலாக கிடைக்க வாய்ப்புள்ளது. எந்த விளையாட்டு ஆனாலும் அதனை விரும்பி விளையாட வேண்டும். தோனி தலைமையில் சிஎஸ்கே அணியில் விளையாடுவதற்கு மகிழ்ச்சி அளிக்கிறது, சிஎஸ்கே அணிக்கு தேர்வானதே மனைவி சொல்லித்தான் தெரிய வந்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே நிச்சயம் வெற்றி பெறும். நல்ல மைதானங்கள், உள்கட்ட அமைப்புகள் இருந்தால் சிறந்த வீரர்கள் இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்.

மன உறுதி உடல் நலத்துடன் மன உறுதியும் வேண்டும், முதலில் இந்தியாவுக்கு விளையாட வேண்டும், அதனைத் தொடர்ந்து ஐபிஎல்க்கு விளையாட வேண்டும்” என்றார்

MUST READ