பாஜக மேலவை உறுப்பினர் புட்டன்னா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தனது 20 வருட அரசியல் வாழ்க்கையில் இந்த அளவிற்கு ஊழல் அரசை நான் கண்டதில்லை என்று பாஜக அரசு மீது பகிரங்க குற்றச்சாட்டு.
பாஜக கட்சி சார்பில் ஆசிரியர்கள் நியமன தொகுதி அடிப்படையில் மேலவை உறுப்பினராக கடந்த வருடம் பதிவியேற்றவர் புட்டன்னா. இவருக்கு மேலவை உறுப்பினர் பதவி காலம் மேலும் நான்கு வருடங்கள் உள்ள நிலையில் தனது மேலவை உறுப்பினர் பதவியை நேற்று ராஜினாமா செய்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.


கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி கே சிவகுமார், எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா, சுர்ஜேவாலா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
மக்களுக்கு பணியாற்ற பல கனவுகளுடன் பாஜக கட்சியில் தான் இணைந்ததாகவும் ஆனால் தான் எதிர்பார்த்த எந்த பணியையும் பாஜக அரசின் மூலமாக செய்ய முடியாத நிலை உள்ளதாகவும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், அவர் தனது 20 வருட அரசியல் வாழ்க்கையில் தற்போது உள்ள பாஜக அரசு செய்யும் ஊழலை போல் எப்பொழுதும் நடந்தது கிடையாது என்ற குற்றச்சாட்டையும் அவர் பகிரங்கமாக கூறியுள்ளார்.

தொடர்ந்து பாஜக கட்சியில் உள்ள முக்கிய தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வரும் காரணத்தினால் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் களத்தில் பாஜக கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது
