நடிகர் சித்தார்த் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் கடைசியாக கமல்ஹாசன் உடன் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அடுத்தது மிஸ் யூ, சித்தார்த் 40 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர், நீண்ட நாட்களாக நடிகை அதிதி ராவ் – ஐ காதலித்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் இவர்களது திருமணம் இரு வீட்டாரின் முன்னிலையில் தென்னிந்திய முறைப்படி நடைபெற்று முடிந்தது.
இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வந்தன. அதே சமயம் பலரும் சித்தார்த் – அதிதி ராவ் தம்பதிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த (அக்டோபர் 31) தீபாவளி தினத்தன்று, சித்தார்த் – அதிதி ராவ் தம்பதி தங்களின் தல தீபாவளியை கொண்டாடி உள்ளனர்.
அதுவும் மணிரத்னம், சுஹாசினி, கமல்ஹாசன் ஆகியோருடன் இணைந்து தீபாவளியை கொண்டாடி உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை நடிகை அதிதி ராவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நடிகர் சித்தார்த் ஏற்கனவே, மணிரத்னம் இயக்கத்தில் ஆயுத எழுத்து எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் அதிதி ராவ் மணிரத்னம் இயக்கியிருந்த செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -