Homeசெய்திகள்அரசியல்2026 தேர்தல் - விஜய்யால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் : ஆட்சியைப் பிடிக்க முடியாது...

2026 தேர்தல் – விஜய்யால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் : ஆட்சியைப் பிடிக்க முடியாது – நடிகர் எஸ்.வி.சேகர்

-

- Advertisement -

வரும் சட்டமன்றத் தேர்தலில், விஜய்யால் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமே தவிர ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இல்லை என நடிகர் எஸ்.வி.சேகர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

2026 தேர்தல் - விஜய்யால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் : ஆட்சியைப் பிடிக்க  முடியாது - நடிகர் எஸ்.வி.சேகர்தமிழகத்தில் பிராமணர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது என்றும் அவர் கூறியுள்ளார்.

we-r-hiring

நடிகரும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான S.Ve.சேகர், சென்னை மந்தைவெளியில் உள்ள தமது இல்லத்தில், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தமிழ்த் திரையுலகிற்கு ஆக்கப்பூர்வமான செயல்களை நிறைவேற்றும் அரசுக்கு எதிராக செயல்படுவோரை கண்டிப்பதாக கூறினார். திரையுலகிற்கு நன்மைகள் செய்யும் அரசின் நடவடிக்கைகளை வரவேற்கும் வகையில் திரையுலகினர் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர் சங்கத்தின் தலைவராக உள்ள ராதாரவி சங்கத்தை தவறாக வழி நடத்துவதாக எஸ்.வி.சேகர் குற்றம் சாட்டினார்.

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாய் திறந்தாலே பொய் – என விமிர்சத்த எஸ்.வி.சேகர், ஒழுங்காக படிக்காத காரணத்தால் தான் அண்ணாமலை அரசியலுக்கு வந்தார் என்றும் இப்போது லண்டனுக்கு படிக்க சென்று இருப்பதாக கூறும் அண்ணாமலை, பாஜக தலைவராக மட்டுமில்ல, அரசியலில் இருப்பதற்கே தகுதியற்றவர் என்றும் சேகர் சாடினார்.

பிராமணர்களுக்கு எதிராக தமிழகத்தில் இனப்படுகொலை நடப்பதாக நடிகை கஸ்தூரி பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்ட அவர், இனப்படுகொலை என பேசினால், அண்ணாமலை பா.ஜ.க.வில் வாய்ப்பளிப்பார் என எதிர்பார்த்த கஸ்தூரிக்கு பா.ஜ.க.வில் கதவுகள் மூடப்பட்டு விட்டன என்றார்.

தமிழகத்தில் பிராமணர்களுக்கு எதிராக எந்த தாக்ககுதலும் நடைபெறவில்லை என்றும் பிராமணர்களுக்கு எதிரான இனப்படுகொலை, பாஜகவில் தான் நடப்பதாகவும் சேகர் கூறினார்.

பிராமணர்களுக்கு நல வாரியம், தனி இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை கொண்டு வருவதாக கூறும் கட்சிக்கு ஆதரவாக வரும் சட்டமன்ற தேர்தலில் பிரசாரம் செய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார்.

சீமான் கட்சியில் இருந்துதான் அதிகளவில், நடிகர் விஜய்யின் த.வெ.க. கட்சியில் சேருவார்கள் என கூறிய எஸ்.வி.சேகர், விஜய்யால் சட்டமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமே தவிர, உடனடியாக ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பில்லை என்றார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எளிதில் பதவிக்கு வந்துவிடவில்லை என்றும் கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் களத்தில் இருந்து, பல எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை அவர் வெற்றி பெற வைத்திருக்கிறார் என்றும் எஸ்.வி.சேகர் குறிப்பிட்டுள்ளார்.

மோடி எல்லாம் எம்மாத்திரம்..? அமெரிக்க அதிபரின் வசதிக்கும், செல்வாக்குக்கும் வெறும் பந்தா

MUST READ