spot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்பிரான்ஸில் ஓய்வூதிய முறையில் மாற்றம் - தொடரும் எதிர்ப்பு

பிரான்ஸில் ஓய்வூதிய முறையில் மாற்றம் – தொடரும் எதிர்ப்பு

-

- Advertisement -

பிரான்ஸில் ஓய்வூதிய முறையில் மாற்றம் – தொடரும் எதிர்ப்பு

ஓய்வூதிய முறையில் மாற்றம் கொண்டுவந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் தலைநகர் பாரீசில், போராட்டங்கள் தொடர்வதால் அங்கு பதற்றமான சூழல் நீடிக்கிறது.

ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க உள்ள பிரான்ஸ் அரசு

ஓய்வூதிய முறையில் மாற்றம் செய்துள்ள பிரான்ஸ் அரசு, ஓய்வு பெறும் வயதை 62இல் இருந்து 64ஆக அதிகரிக்க உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தவகையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஏராளமானோர் சாலையில் திரண்டு அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். அதிபர் இமானுவேல் மேக்ரான் பதவி விலக வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

we-r-hiring

ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் அதிகரித்தால், மூத்த குடிமக்களின் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கவலை தெரிவித்தனர். அதிபர் இமானுவேல் மேக்ரான் செயல்பாடுகளில் சமூக நீதி இல்லை என்றும் குற்றம்சாட்டினர்.

MUST READ