குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று பிற்பகல் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதை அடுத்து மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே, பழைய குற்றால அருவியில் வரலாறு காணாத வகையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் இருந்து வெளியேறும் வெள்ளநீர், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றால அருவிகளின் கரைகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.


