spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகாளிதாஸ் ஜெயராமுக்கு விரைவில் திருமணம்.... முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நேரில் சென்று அழைப்பு!

காளிதாஸ் ஜெயராமுக்கு விரைவில் திருமணம்…. முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நேரில் சென்று அழைப்பு!

-

- Advertisement -

நடிகர் காளிதாஸ் ஜெயராமுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சென்று அழைத்துள்ளார்.காளிதாஸ் ஜெயராமுக்கு விரைவில் திருமணம்.... முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நேரில் சென்று அழைப்பு!

தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயராம். இவரது மகன் தான் காளிதாஸ் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் காளிதாஸ் ஜெயராம் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் பணியாற்றி வருகிறார். இவர் தமிழில் மீன் குழம்பு மண் பானையும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து பாவக்கதைகள் படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. மேலும் இவர் கமல்ஹாசன் உடன் இணைந்து விக்ரம், தனுஷுடன் இணைந்து ராயன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் காளிதாஸ் ஜெயராமுக்கு வருகின்ற டிசம்பர் 7ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. அதன்படி காளிதாஸ் ஜெயராம் மாடல் அழகி தாரணி காளிங்கராயர் என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதை தொடர்ந்து இருவீட்டாரின் சம்பந்தத்துடன் இவர்களின் திருமணம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. காளிதாஸ் ஜெயராமுக்கு விரைவில் திருமணம்.... முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நேரில் சென்று அழைப்பு!கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் காளிதாஸ் ஜெயராமின் சகோதரி மாளவிகாவிற்கு திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது காளிதாஸ் ஜெயராமுக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வரும் நிலையில் காளிதாஸ் ஜெயராம் தனது குடும்பத்துடன் முதலமைச்சர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து தன்னுடைய திருமணத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ