spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஉணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள் - பொது மக்கள் அச்சம்

உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள் – பொது மக்கள் அச்சம்

-

- Advertisement -

நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது குடியிருப்புகள் மற்றும் வாகனங்கள், கடைகளை தாக்குவது, விவசாய பயிர்களை சேதம் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள்  - பொது மக்கள் அச்சம்
இந்நிலையில்வனத்துறையினர் யானைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் நேற்று முன்தினம் தேவாலா வனச்சரகம் தொண்டியாளம் பகுதியில் திடீரென உப்பட்டி, பந்தலூர் நெடுஞ்சாலையில் குறுக்கிட்ட கொம்பு யானை ஒன்று சாலையில் நின்றிருந்த வனத்துறை வாகனத்தை தனது தந்தத்தால் குத்தி உடைத்து சேதம் செய்து தலைகுப்புற தள்ளியுள்ளது.இதனால், வாகனத்தில் இருந்த வேட்டைத்தடுப்பு காவலர்கள் 5 பேரும் கத்தி கதறியுள்ளனர். இவர்கள் கூச்சலிட்டதில் யானை அங்கிருந்து நகர்ந்து சென்றது.வாகனத்தில் இருந்த வேட்டைத்தடுப்பு காவலர் லிவிங்ஸ்டார் மற்றும் பாலசுந்தர் ஆகியோருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன.உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள்  - பொது மக்கள் அச்சம்

we-r-hiring

ஓட்டுநர் உப்பட்டி பகுதியை சேர்ந்த ரமேஷ்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. வனத்துறை வாகனத்தை யானை தாக்கிய சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்அதன்பேரில், தேவாலா வனச்சரகர் சஞ்சீவி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாகனத்தை மீட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட வேட்டைத்தடுப்பு காவலர்களையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். படுகாயம் அடைந்த டிரைவர் ரமேஷ்குமார் கேரள மாநிலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வனச்சரகர் சஞ்சீவி கூறுகையில், ‘‘கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதிக்கு வந்த யானை தற்போது மீண்டும் வந்துள்ளது யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்’’ என்றார். மேலும் பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், காட்டு யானைகள் தொடர்ந்து குடியிருப்புக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்தியாவிலேயே ஆவணங்களை காப்பதில் தமிழ்நாடு தான் முதன்மை மாநிலம் – அமைச்சர் கோவி.செழியன் பெருமிதம்!

 

MUST READ