பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.79,100 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில், கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையை ஒட்டி இன்று வழக்கத்தை விட கூடுதல் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன. இதனால் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இந்நிலையில் பத்திரப் பதிவிற்கு கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து. அதன் பேரில் பொன்னேரியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.79,100 ரொக்க்ப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அலுவலகத்தில் இருந்து பல முக்கிய ஆவணங்களும், கோப்புகளும் சிக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் யாருடையது என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதனிடையே, பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


