நடிகர் விஜய் சேதுபதி தற்போது தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ட்ரெயின், ஏஸ், காந்தி டாக்ஸ் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும் சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இதற்கிடையில் இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் விடுதலை 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து சூரி, மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி உள்ள இந்த படமானது வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் விஜய் சேதுபதி. அப்போது அவரிடம் கங்குவா குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது சமீப காலமாக தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களின் படங்கள் சரியாக ஓடுவதில்லை. கங்குவா திரைப்படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது.
Such a Low!
Whether #Kanguva is a hit or a flop, what’s the point?
Agenda-driven questions only serve as damage control. #VijaySethupathi was visibly upset by the relentless, forced questioning from our jurnos. 😌pic.twitter.com/EF89QEVNhy
— Telugu Bit (@Telugubit) December 16, 2024
அதற்கு விஜய் சேதுபதி, “நான் இங்கு விடுதலை 2 படத்தின் ப்ரோமோஷன்காக தான் வந்திருக்கிறேன். என்னிடம் ஏன் சம்பந்தமில்லாமல் இந்த கேள்வியை கேட்கிறீர்கள். எந்த படமும் தோல்வியடைய வேண்டுமென்று எடுக்கப்படுவதில்லை. வெற்றி பெற வேண்டும் என்று தான் இருக்கிறார்கள். தோல்வி என்பது எல்லா நடிகர்களுக்கும் வரும். எனக்கும் வந்திருக்கிறது. இணையும் ட்ரோல் செய்து இருக்கிறார்கள்” என்று கடுப்பாக பேசினார் விஜய் சேதுபதி.