Homeசெய்திகள்சினிமா'சூர்யா 44' படத்தின் டைட்டில் டீசர் குறித்த அறிவிப்பு!

‘சூர்யா 44’ படத்தின் டைட்டில் டீசர் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

சூர்யா 44 படத்தின் டைட்டில் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.'சூர்யா 44' படத்தின் டைட்டில் டீசர் குறித்த அறிவிப்பு!

நடிகர் சூர்யா கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்திருந்தார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44 வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தினை சூர்யாவும் கார்த்திக் சுப்பராஜும் இணைந்து தயாரித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். காதல் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு அந்தமான், கேரளா, ஊட்டி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. 'சூர்யா 44' படத்தின் டைட்டில் டீசர் குறித்த அறிவிப்பு!அதே சமயம் இந்த படமானது அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வருகின்ற டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது..

MUST READ