Homeசெய்திகள்சினிமாரசிகர்களின் ஆதரவை பெறும் 'கேங்கர்ஸ்.... முதல் நாள் வசூல் எவ்வளவு?

ரசிகர்களின் ஆதரவை பெறும் ‘கேங்கர்ஸ்…. முதல் நாள் வசூல் எவ்வளவு?

-

- Advertisement -

கேங்கர்ஸ் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.ரசிகர்களின் ஆதரவை பெறும் 'கேங்கர்ஸ்.... முதல் நாள் வசூல் எவ்வளவு?

இயக்குனர் சுந்தர்.சி – வடிவேலு காம்போவில் வெளியான தலைநகரம், நகரம் ஆகிய படங்களில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கடந்த 13 வருடங்களுக்குப் பிறகு சுந்தர்.சி – வடிவேலு காம்போ மீண்டும் இணைந்துள்ளது. அதாவது வடிவேலுவிற்கு மாமன்னன் படத்தை தவிர சமீபகாலமாக வெளிவந்த சில படங்கள் பெரிய வெற்றியை தரவில்லை. இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் அவரை மீண்டும் பழைய காமெடியன் வடிவேலுவாக பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தனர். தற்போது சுந்தர். சி ரசிகர்களின் அந்த ஏக்கத்தை தீர்த்து வைத்துள்ளார். ரசிகர்களின் ஆதரவை பெறும் 'கேங்கர்ஸ்.... முதல் நாள் வசூல் எவ்வளவு?சுந்தர்.சி – வடிவேலு காம்போவில் உருவாகியிருந்த கேங்கர்ஸ் திரைப்படம் நேற்று (ஏப்ரல் 25) திரைக்கு கொண்டுவரப்பட்டது. சுந்தர்.சி யின் மற்ற படங்களைப் போல் லாஜிக் எதுவும் இல்லாமல் இருந்தாலும் வடிவேலுவும், அவருடைய காமெடியும் படத்தை தாங்கி பிடித்திருக்கிறது. எனவே படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வெற்றிப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி இப்படம் வெளியான முதல் நாளில் உலக அளவில் ரூ. 2 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கோடை விடுமுறை என்பதால் இனிவரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ