அட்லீ – அல்லு அர்ஜுன் படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற பல வெற்றி படங்களை தந்து பாலிவுட்டிலும் ஜவான் படத்தை இயக்கி பெயரையும் புகழையும் பெற்றவர் இயக்குனர் அட்லீ. இவர் அடுத்ததாக அட்லீ, அல்லு அர்ஜுனின் 22-வது திரைப்படத்தை இயக்க உள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் அபியங்கர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சுமார் ரூ. 800 கோடி பட்ஜெட்டில் தயாராக இருக்கிறது. அதாவது இந்த படத்தின் அறிவிப்பு ப்ரோமோ வெளியான போதே இது உறுதி செய்யப்பட்டது. மேலும் பலரையும் பிரமிக்க வைத்தது. எனவே ஹாலிவுட் ரேஞ்சில் தயாராக உள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வரும் நிலையில் இந்த படத்தின் புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது ஏற்கனவே இப்படத்தில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்றும் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது கிடைத்த அப்டேட்டின் படி, இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க தீபிகா படுகோன், ஜான்வி கபூர், மிர்ணாள் தாகூர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்த மூவரில் யாரேனும் ஒருவரைப் படத்தில் நடிக்கப் போகிறார்களா? அல்லது இப்படத்தில் மூன்று கதாநாயகிகளா? என்பது தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது.