Homeசெய்திகள்சினிமாவிவேக் இறப்பாருன்னு எதிர்பார்க்கல.... கலங்கிய வடிவேலு!

விவேக் இறப்பாருன்னு எதிர்பார்க்கல…. கலங்கிய வடிவேலு!

-

- Advertisement -

நடிகர் வடிவேலு, விவேக் குறித்து பேசி உள்ளார்.விவேக் இறப்பாருன்னு எதிர்பார்க்கல.... கலங்கிய வடிவேலு!தமிழ் சினிமாவில் 80 – 90களில் நகைச்சுவை என்றாலே அது கவுண்டமணி – செந்தில் தான். இவர்களின் காம்போவில் வெளியாகும் காமெடிகளை யாராலும் மறக்க முடியாது. அதேபோல தான் வடிவேலு – விவேக் காம்போ. இருவருமே தனித்தனியே நகைச்சுவை நடிகர்களாக கோலாட்சி செய்தாலும், இருவரும் இணைந்து வாழ்க்கையை சிரிப்பால் செழிக்க செய்தவர்கள். அந்த வகையில் இருவரும் இணைந்து மனதை திருடிவிட்டாய், லூட்டி, கந்தா கடம்பா கதிர்வேலா, திருப்பதி ஏழுமலை வெங்கடேசா என பல படங்களில் நடித்து அசத்தி இருந்தனர். இது தவிர இருவருமே குணத்தில் வேறுபட்டவர்களாக இருந்தாலும் நட்பாக பழகி வந்தனர். இந்நிலையில் தான் விவேக்கின் மறைவிற்கு வடிவேலு நேரில் சென்று பார்க்கவில்லை என்று விமர்சனம் எழுந்தது. விவேக் மட்டுமல்லாமல் போண்டாமணி போன்றோரின் மறைவிற்கும் வடிவேலு நேரில் செல்லவில்லை என பல விமர்சனங்கள் வெளிவந்தன.விவேக் இறப்பாருன்னு எதிர்பார்க்கல.... கலங்கிய வடிவேலு! இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய வடிவேலு, “விவேக்கின் இழப்பு தாங்க முடியாத வழி. அவருடைய இறப்பிற்கு நான் போகவில்லை என்று நிறைய பேர் சொன்னாங்க. ஆனா நான் வீட்டுக்கு போயி அவருடைய மனைவி, புள்ள குட்டிகிட்ட எல்லாம் விசாரிச்சேன். விவேக் இறப்பான்னு எதிர்பார்க்கல. அந்த நேரத்துல நானே ரொம்ப மோசமாக தான் இருந்தேன். என் வீட்டில் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துட்டு பயந்துட்டு இருந்தோம். அதனாலதான் நான் போகல” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ