spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமிரட்டிய மோகன்லால்....அப்போ 'த்ரிஷ்யம்' இப்போ 'துடரும்' .... ட்விட்டர் விமர்சனம்!

மிரட்டிய மோகன்லால்….அப்போ ‘த்ரிஷ்யம்’ இப்போ ‘துடரும்’ …. ட்விட்டர் விமர்சனம்!

-

- Advertisement -

துடரும் படத்தின் ட்விட்டர் விமர்சனம்.மிரட்டிய மோகன்லால்....அப்போ 'த்ரிஷ்யம்' இப்போ 'துடரும்' .... ட்விட்டர் விமர்சனம்!

மோகன்லால், ஷோபனா ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருந்த துடரும் திரைப்படம் இன்று (ஏப்ரல் 25) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மோகன்லால் – ஷோபனா கூட்டணி கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருப்பதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வந்தது. மேலும் இவர்களுடன் இணைந்து பிரகாஷ் வர்மா, தாமஸ் மேத்யூ ஆகியோரும் நடித்திருந்தனர். இந்த படத்தை தருன் மூர்த்தி இயக்கியுள்ளார். மோகன்லால் நடிப்பில் கடைசியாக வெளியான மலைக்கோட்டை வாலிபன், பரோஸ் எம்புரான் போன்ற மூன்று படங்களுமே படங்கள் எதிர்பார்த்து வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளியான துடரும் படத்தின் ட்விட்டர் விமர்சனங்களை பற்றி பார்ப்போம்.

we-r-hiring

அதன்படி ரசிகர் ஒருவர், “துடரும் திரைப்படம் முதலில் மெதுவாக தொடர்ந்தாலும் இடைவெளிக்கு முன்பு 30 நிமிடங்கள் எதிர்பாராத பல திருப்பங்கள் இருக்கிறது. இரண்டாம் பாதி சுவாரஸ்யமாக செல்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அதே ரசிகர், “அப்போ த்ரிஷ்யம் இப்போ துடரும். என்ன ஒரு எமோஷனல் ஃபேமிலி த்ரில்லர் படம்? இரண்டாம் பாதி நெருப்பாய் இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

மற்றுமொரு ரசிகர், “இதாண்டா ஃபேன் பாய் படம். இதாண்டா சினிமா” என்று பதிவிட்டு தன்னுடைய கருத்தினை தெரிவித்துள்ளார்.

MUST READ