விஜய் சேதுபதி மகன் நடித்துள்ள பீனிக்ஸ் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதேசமயம் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, சிந்துபாத் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதைத் தொடர்ந்து ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் பீனிக்ஸ் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை பிரேவ் மேன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சாம் .சி.எஸ் இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பல மாதங்களுக்கு முன்பாகவே நிறைவு பெற்றது. அதைத்தொடர்ந்து இப்படம் கடந்தாண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் அதை நாளில் வெளியானதால் இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இது குறித்து படக்குழுவினரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நாளை (ஏப்ரல் 25) மாலை 6 மணி அளவில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. எனவே இந்த அறிவிப்பு ரிலீஸ் குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.