IMDb இல் அதிக ரேட்டிங்கை பெற்ற டாப் 10 தமிழ் படங்களின் லிஸ்ட்.
விடுதலை 2 ( ரேட்டிங் – 8.9)

கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விடுதலை படத்தின் முதல் பாகம் நடிகர் சூரியை சுற்றி நகர்ந்த நிலையில் இரண்டாம் பாகம் விஜய் சேதுபதியை சுற்றி நகர்கிறது. அந்த வகையில் இந்த படத்தில் பெருமாள் வாத்தியாராக நடித்த விஜய் சேதுபதி தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார். இந்த படம் IMDb ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
மகாராஜா (ரேட்டிங் – 8.5)
விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகியிருந்த படம் தான் மகாராஜா. இந்த படம் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி திரையிடப்பட்ட நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஓடிடியில் வெளியான பின்னரும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. அடுத்தது இந்த படம் சீனாவிலும் மாஸ் காட்டி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்தார். ஹீரோவை விட திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படம் IMDb ரேட்டிங்கில் 2ஆம் இடத்தை பிடித்துள்ளது.
மெய்யழகன் – ( ரேட்டிங் 8.4)
IMDb ரேட்டிங்கில் 3ஆம் இடத்தை பிடித்துள்ள படம் மெய்யழகன். இந்த படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, தேவதர்ஷினி, ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தை பிரேம்குமார் இயக்கியிருந்தார். கார்த்திக்கும் அரவிந்த்சாமிக்கும் இடையிலான பாசப்பிணைப்பை அற்புதமான திரைக்கதையின் மூலம் விருந்தாகப் படைத்திருந்தார் பிரேம்குமார். இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றி படமாக அமைந்துள்ளது.
அமரன் ( ரேட்டிங் – 8.3 )
மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்த இந்த படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாக வாழ்ந்து பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்றுள்ளார். மேலும் அவருக்கு நிகராக இந்து ரெபேக்கா வர்கீஸ் எனும் கதாபாத்திரத்தில் நடித்து கைதட்டல் பெற்றுள்ளார் சாய்பல்லவி. சிவகார்த்திகேயனின் எந்த ஒரு படமும் படைக்காத சாதனையை இந்த படம் படைத்து சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்றுத் தந்துள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்த இந்த படம் IMDb ரேட்டிங்கில் 4ஆம் இடத்தை பிடித்துள்ளது.
லப்பர் பந்து ( ரேட்டிங் 8.2)
ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான படம்தான் லப்பர் பந்து. தமிழரசன் பச்சமுத்து இயக்கியிருந்த இந்த படத்தில் சுவாசிகா, பால சரவணன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்று IMDb ரேட்டிங்கில் 5ஆம் இடத்தை பிடித்துள்ளது.
வேட்டையன் ( ரேட்டிங் – 7.1)
கடந்த அக்டோபர் 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயற்றியிருந்தார். போலி என்கவுண்டர் குறித்தும் கல்வி முறையில் உள்ள ஓட்டைகள் குறித்தும் பேசப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றதோடு IMDb ரேட்டிங்கில் 6ஆம் இடத்தை பிடித்துள்ளது.
கருடன் ( ரேட்டிங் 7.1)
கடந்த மே மாதம் சூரி நடிப்பில் வெளியான படம் தான் கருடன். இந்த படத்தில் சூரியுடன் இணைந்து சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் காதல், விஸ்வாசம், பகை, துரோகம் என அனைத்தும் காட்டப்பட்டிருந்தது. நடிகர் சூரி இந்த படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்கி இருந்தார். கிராமத்துக் கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படமும் IMDb ரேட்டிங்கில் 6ஆம் இடத்தை பிடித்துள்ளது.
லவ்வர் (ரேட்டிங் 7.0)
ஜெய் பீம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் மணிகண்டன். இவர் தற்போது தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் குட் நைட் படத்தை தொடர்ந்து இவர் நடித்திருந்த திரைப்படம் தான் லவ்வர். இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் மணிகண்டன். இந்தப் படம் IMDb ரேட்டிங்கில் 7ஆம் இடத்தை பிடித்துள்ளது.
ராயன் ( ரேட்டிங் – 6.5)
கடந்த ஜூலை மாதம் தனுஷின் நடிப்பில் இயக்கத்திலும் ராயன் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆக்சன் கலந்த ஜானரில் வெளியான இந்த படம் IMDb ரேட்டிங்கில் 8ஆம் இடத்தை பிடித்துள்ளது.
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) – (ரேட்டிங் – 5.8)
கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி விஜய் நடிப்பில் வெளியான கோட் என்று சொல்லப்படும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் IMDb ரேட்டிங்கில் 9ஆம் இடத்தை பிடித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய், அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். மேலும் அழகிய தமிழ் மகன் படத்திற்கு பிறகு ஹீரோவாகவும் வில்லனாகவும் மிரட்டி இருந்தார். வெங்கட் பிரபு இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அந்தகன்
தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்து வெளியான படம் தான் அந்தகன். இந்த படத்தில் பிரசாந்துடன் இணைந்து சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் IMDb ரேட்டிங்கில் 10ஆம் இடத்தை பிடித்துள்ளது.