spot_imgspot_imgspot_imgspot_img
HomeREWIND 2024அறிவு செய்த மாற்றம் – என்.கே.மூர்த்தி

அறிவு செய்த மாற்றம் – என்.கே.மூர்த்தி

-

- Advertisement -

அறிவு செய்த மாற்றம்

அறிவு செய்த மாற்றம்

இந்த உலகம் பிறந்தபோது ஆதி மனிதன் அம்மணமாகவே திரிந்தான். உணவிற்காக வேட்டையாடி வாழ்ந்து வந்த மனிதன். எந்த உணவைத் தேடி வேட்டைக்கு சென்றானோ அதற்கே உணவாகி போன துயரமான வாழ்க்கையாக இருந்தது.

என் உணவு என்னைத் தேடி வருவதற்கு என்னை வழி? நான் தேடி செல்லும் உணவு என்னை சாப்பிடாமல் இருப்பதற்கு என்ன வழி? என்று சிந்தித்த முதல் மனிதன் விவசாய தொழிலை ஆரம்பித்துவிட்டான். வேட்டை கலாச்சாரத்தில் தோல்வி அடைந்த மனிதன் விவசாய கலாச்சாரத்தை கண்டுப் பிடித்தான்.

we-r-hiring

அறிவு செய்த மாற்றம்வேட்டையாடி வந்த சமூகம் தன் அறிவை பயன்படுத்தி விவசாயத்திற்கு திரும்பியது. வேட்டையாடுவதில் இருந்த கடின உழைப்பு, உயிர் பயம், துயரம் விவசாயத்தில் இல்லை. அறிவை பயன்படுத்த தொடங்கினான், அவனைத் தேடி உணவு வரத் தொடங்கியது.

இந்த பூமியில் முதன்முதலில் தோன்றிய உயிரினம் புல், பூண்டு, செடி, கொடி, மரம் போன்ற தாவரயினம். அதற்கு அடுத்து பறவையினம் தோன்றியது. மூன்றாவதாக தொன்றியது விலங்கினம். அதாவது மனிதயினம்.

அறிவு செய்த மாற்றம்குரங்கில் இருந்து மாற்றம் அடைந்து மனித உருவம் பெற்று முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. மனிதன் தோன்றியதும் அவன் கண்டுப்பிடித்த முதல் கண்டுப்பிடிப்பு “கடவுள்”. அடுத்தது அவன் கண்டுப் பிடித்ததில் மிகவும் முக்கியமானது மொழி. மனிதன் மொழியை காப்பாற்ற காட்டிய அக்கறையை விடவும் கடவுளை காப்பாற்றுவதற்கு அவன் காட்டிய ஆர்வமும், அக்கறையும் அதிகம். அதனால்தான் ஆதிகாலத்தில் இருந்த பல மொழிகள் தற்போது வழக்கத்தில் இல்லாமல் போனது.

ஆதிகால மனிதனுக்கு கேள்வியே இல்லாமல் இருந்தது. எந்தெந்த இடத்தில் கேள்விகள் இல்லையோ அந்த இடங்களை எல்லாம் கடவுள் ஆக்ரமித்துக் கொண்டது. எங்கெல்லாம் கேள்வி பிறந்து, அந்த கேள்விகளுக்கு விடை கிடைத்ததோ அங்கிருந்து கடவுள் மெதுவாக விடைப் பெற்றுக் கொண்டது. இன்னும் எங்கே கேள்வி இல்லாமல் இருக்கிறதோ அங்கே கடவுள் இப்போதும் உயிருடன் இருக்கிறார்.

அறிவு செய்த மாற்றம்

மனிதனுக்கு முன் தொன்றிய பறவைகள் பறக்கிறது, காகம், கழுகு, குருவி, பட்டாம்பூச்சி என்று அனைத்தும் பறக்கிறது. தரையில் வாழ்வதற்கு பழகிக் கொண்ட கோழி கூட பறக்கிறது. ஆனால் பறவைகளுக்கு பின்னர் பிறந்த மனிதனால் பறக்க முடியவில்லை.

பறவைகளுக்கு றெக்கைகளை கொடுத்த கடவுள் மனிதனுக்கு றெக்கை களை கொடுக்க மறந்தது ஏன்? மறுத்தது ஏன் ?அதுதான் கடவுள் செய்த விதி, கடவுள் மனிதனுக்கு செய்த சதி என்ற முடிவிற்கு மனிதன் வந்துவிட்டான். அதை பல லட்சம் ஆண்டுகளாக நம்பி வந்தான்.

ஒரே ஒருவனுக்கு மட்டும் திடீரென்று அறிவு வந்தது. அவன் பெயர் நியூட்டன். மனிதனின் வாழ்க்கை பாதையை தலைகீழாக மாற்றிக்காட்டிய முதல் அறிவாளி. நியூட்டன் தோட்டத்தில் அமர்ந்திருந்த போது ஆப்பிள் பழம் மரத்தில் இருந்து கீழே மண்ணில் விழுந்தது. இங்கே தான் நியூட்டனின் அறிவு வேலை செய்தது. மரத்தில் இருந்து உதிரும் பழம் மேலே போகாமல் கீழே பூமியில் விழுந்தது ஏன் என்ற கேள்வி எழுந்தது.

அறிவு செய்த மாற்றம்

அதுவரை தரையில் தேங்காய் விழுந்தது, மாங்காய் விழுந்தது. ஒருவரும் கண்டுக் கொள்ளவில்லை. நியூட்டன் மூளையில் மட்டும் திடீரென்று உதித்தது. ஆராய்ந்தார். அடுத்த நூற்றாண்டில் விமானம் கண்டுப் பிடிக்கப்பட்டது.

அதுவரை விதியின் பெயராலும், கடவுளின் பெயராலும் பறக்கமுடியது என்று மனிதன் நம்பி வந்தான். அந்த விதியை அறிவு உடைத்தது. விமானத்தை கண்டுப்பிடித்தான். பறவையை விட அதிக உயரத்தில் மனிதனும் பறந்தான்.

மனிதன் தன் அறிவால், தன் ஆற்றலால் தன்னைத்தானே பறக்கும் சக்தி உள்ளவன் என்று அறிந்து கொள்வதற்கு லட்சக்கணக்கான ஆண்டுகள் தேவைப்பட்டது.

ஒருகாலத்தில் வேப்பம் மரத்திலும், புளியமரத்தில் இரவு நேரத்தில் பேய், பிசாசு இருக்கும். முனி அடிச்சதாக இறந்தவர்கள் ஏராளம். கிராம மக்கள் அதை நம்பினார்கள்.

அறிவு செய்த மாற்றம்
இரவு நேரங்களில் மரத்தின் அடியில் தூங்கக்கூடாது ஏன்?

இரவு நேரத்தில் வருகின்ற பேய், முனி பகல் நேரத்தில் எங்கே போகும்? மரத்தின் அடியில் பகலில் படுத்தால் ஆரோக்கியமான தூக்கம் வருகிறது. அதே மரத்தின் கீழ் இரவு நேரத்தில் படுத்தால் மூச்சு அடைக்கிறது. அதற்கு என்ன காரணம்? கேள்வி எழுந்தது.

பகல் நேரத்தில் மரங்கள் கார்பன் டை ஆக்சைடு (Carbon dioxide) உள்ளே இழுத்துக் கொண்டு பிராணவாயு (Oxygen) வெளியே விடுகிறது. மரத்தின் கீழ் உறங்கும் மனிதனுக்கு சுவாசப் பிரச்சனை இல்லாமல் ஆரோக்கியமான தூக்கம் வருகிறது. அதே மரம் இரவு நேரத்தில் பிராணவாயுவை உள்ளே இழுத்துக் கொண்டு கார்பன் டை ஆக்சைடு வெளியே விடுகிறது. மரத்தின் கீழே இரவு நேரத்தில் தூங்கும் மனிதனுக்கு சுவாசப் பிரச்சனை ஏற்படுகிறது. இருதய நோய் உள்ளவர்கள் இறந்தும் போகிறார்கள். இந்த அறிவு வந்தப் பின்னர் பேய், பிசாசு காணாமல் போய்விட்டது.

இரவு நேரங்களில் மரத்தின் அடியில் தூங்கக்கூடாது ஏன்?இந்த பேய்களையும், பிசாசுகளையும் கடவுள் வந்து விரட்ட வில்லை. பூஜை செய்து விரட்ட வில்லை. இந்த பிசாசுகளை விரட்டியது அறிவு. அறிவு வந்ததும் அறியாமையில் இருந்த அனைத்தும் காணாமல் போய்விடுகிறது.

இந்த பூமியில் ஏராளமான கடவுள்கள் இருக்கிறது. இஸ்லாமியர்களுக்கு ஒரு கடவுள், கிரிஸ்துவர்களுக்கு ஒரு கடவுள், யூதர்களுக்கு ஒரு கடவுள், சீக்கியர்களுக்கு தனி கடவுள், இந்துக்களுக்கு ஆயிரக்கணக்கான கடவுள்கள் இருக்கிறது. ஆனால் இந்த பூமியில் அறிவு என்பது ஒன்றே ஒன்றுதான். அறிவு என்பது ஆளுக்கு ஏற்றார் போல், மதத்திற்கு ஏற்றார் போல் மாறுபடாதது, அறிவு என்பது பேதம் பாராதது. இப்பொழுது சொல்லுங்கள் ஒற்றை அறிவு பெரியதா? பல ஆயிரம் கடவுள் பெரியதா?

அறிவு தான் பெரியது. அறிவுள்ளவரிடம் அன்பு இருக்கும், வெறுப்பு இருக்காது. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பிரிவினை இருக்காது. அறிவுள்ளவர்
நாகரிகத்துடன் நடந்து கொள்வார். அவர்களிடம் உயர்ந்த பண்பு இருக்கும். ஒழுக்கத்தில் தலை சிறந்த மனிதராக இருப்பார்கள். அறிவு அனைத்தையும் வெல்லக்கூடிய ஆற்றல் கொண்டது.

அதானி குழுமத்தின் டெண்டரை ரத்து செய்த தமிழக அரசு

MUST READ