அதிக மனித உயிர்களை காவு வாங்கிய 2024 – தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்டராங் படுகொலை – விஷசாராயத்தால் உயிரிழந்த 63 பேர் என்று உயிர்களை காவு வாங்கி சோகமான ஆண்டாக கடந்து செல்கிறது.
ஜனவரி
ஜனவரி 12 ல் – நீளமான கடல்பாலம் – மும்பையில் ரூ.18 ஆயிரம் கொடியில் அமைக்கப்பட்ட மிக நீளமான கடல்பாலத்தை பிரதமர் மோடி ஜனவரி 12 ம் தேதி திறந்து வைத்தாா். 22 கி.மீ. நீளம் உள்ள இந்த பாலம் மும்பை – நிவிமும்பையை இணைக்கிறது. இதில் 16.5 கி.மீ. தூரம் கடல் மீது பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
ஜனவரி 22ல் – ராமர் கோவில் கும்பாபிஷேகம் – அயோத்தில் நாமர் கோவில் கும்பாபிஷேக பணிகள் ஜனவரி 16ல் தொடங்கின. 108 அடி உயர ராட்சத ஊதுவத்தி ஏற்றப்பட்டது. அயோத்தி ராமர் கோவில் நினைவு தபால் தலையை ஜனவரி 18ல் பரதமர் மோடி வெளியிட்டாாா். ஜனவரி 22 ம் தேதி ராமர் போவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்நது. அமைதியின் அடையாளம் அயோத்தி கோவில் என்று மோடி பேசினாா். முன்னதாக மோடி 11 நாட்கள் விரதம் கடைப்பிடித்தாா். ஸ்ரீரங்கம், ராமேசுவரம் போவில்களில் வழிபாடு செய்தாா். 22 தீர்த்த கிணறுகளிலும் புனித நீராடினாா்இ கும்பாபிஷேகத்திற்கு முன்பு, கண்கள் மூடிய பாலராமர் சிலை புகைப்படங்கள் வெளியானதால் சலசலப்பு ஏற்பட்டது. பல மாறிலங்கள் விடுமுறை அறிவித்து கும்பாபிஷேகத்தை கொண்டாடினஃ 7 ஆயிரம் பிரபலங்களுக்கு அழைப்பிதழ் ஆனுப்பப்பட்டிருந்தது. ரஜினி உள்பட ஏராளமானவர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கு பெற்றனர்.
ஜனவரி 28 ல் – அரசியல் திருப்பம் – பீகார் அரசியலில் அதிரடி திருப்பமாக ஜனவரி 28ல் காங்கிரசின் ஆதரவை விலக்கி முதல் – மந்திரி பதவியை கலையில் ராஜினாமா செய்த நிதிஷ்குமார். மாலையில் பாஜனதாவின் ஆதரவுடன் மதல்-மந்திரியாக பதவியேற்றாா். பாரதியஜனதாவை சேர்நத 2 பேருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டது. கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 9-ந் தேதி இதேபோல் பாரதிய ஜனதாவின் உறவை முறித்து, ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் சட்சிகளின் ஆதரவுடன் அவர் முதல்-மந்திரியாக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி உருவாக அடித்தளமிட்டாா் என்பது குறிபிபிடத்தக்கது. பின்னா் அவரே பாரதிய ஜனதா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துவிட்டாா்.
ஜனவரி 31- நிலகரி சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்கண்ட் மாநில முதல்- மந்திரி ஹேமந்த் சோரன் கைதானாா். உடனடியாக பதவியை ராஜினாமா செய்தாா். ஜூன் மாதம் 28ல் ஜாமீனில் வெளியே ஹேமந்த் சோரன் மீண்டும் ஜூலை 4ல் முதல்-மந்திரி ஆனாா். இடைப்பட்ட 5 மாத காலம் சம்பாய் சோரன் முதல்- மந்திரியாக இருந்தாா்.
பிப்ரவரி
பிப்ரவரி 17ல் – தமிழ்நாடு காங்கிரஸ் புதிய தலைவராக நியமனம்.
பிப்ரவரி 24 ல் – விளவங்கோடு தொகுதி காங்கிரஜ் எம்.எல்.ஏ. விஜயதரணி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தாா். கட்சி தாவல் தடை சட்டப்படி அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை இழந்தாா்.
பிப்ரவரி 25ல் – தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே பிபி.25ல் லாரி ஒன்று விபத்தில் சிக்கி தண்டவாளத்தில் கவிழ்ந்து கிடந்தது. அப்போது டார்ச் லைட்அடித்து ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அவர்களை பாராட்டி 27-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூபாய் 5 லட்சம் பரிசு வழங்கினாா்.
பிப்ரவரி 24 ல் – போதைப் பொருள் கடத்தலில் – மத்திய அரசின் போதை பொருள் கட்டுப்பாட்டு குறை, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து அதிகாரிகளின் உதவியுடன் பிப்ரவரி 24-ந் தேதி ரூபாய் 2 ஆயிரம் கோடி மதிப்பிரான போதைப் பொருளை கடத்த முயன்றதாக தமிழகத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்தது. அவர்கள் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தி.மு.க நிர்வாகி ஜாபர் சாதிக் தலைமையில் செயல்பட்டதாக கூறினர். இதையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டாா். டெல்லியில் மார்சி 9 ம் தேதி கைதானாா்.
பிப்ரவரி 28 ல் – குலசையில் ராக்கெட் தளம் – குலசேகரன் பட்டினத்தில் ரூபாய் 986 கோடி மதிப்பில் ராக்கெட் ஏவுதளத்திற்கு பிப்ரவரி 28ல் அடிக்கல் நாட்டப்பட்டது. இது உள்பட ரூபாய் 17 ஆயிரம் கோடி திட்டப்பணிகளுக்கு தூத்துக்குடியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினாா். கோரனை முயற்சியாக ரோகிணி ராக்கெட் ( ஆர்.எச்.200) விண்ணில் பாய்ந்தது.
மார்ச்
மார்ச் 1 ல் – ஓட்டலில் வெடித்த டைம்பாம் – பெங்களூரு குந்தலஹள்ளியில் ராமேஸ்வரம் கபே ஓட்டலில் மார்ச்.1-ந் தேதி 2 டைம்பாம் குண்டுகள் வெடித்தன. 10 பேர் படுகாயம் அடைந்தனா். ஐ.எஸ் பயங்கரவாத தொடர்பு இருப்பதாக விசாரணையில் இறங்கிய என்.ஐ.ஏ. ஏப்ரல் 12-ல் தலைமறைவாக இருந்த 2 குற்றவாளிகள் கொல்கத்தாவில் பதுங்கி இருந்தபோது கைது செய்தனா்.
மார்ச் 8 ல் – இன்போசிஸ் அறக்கட்டளை தலைவர் சுதா மூர்த்தி மாநிலங்களவை எம்.பி.யாக நியமிக்கப்பட்டு உள்ளதாக மோடி அறிவித்தாா்.
மார்ச் 11 ல் – முஸ்லிமாக மாறும் ஆதிதிராவிடர் பிற்படுத்தப்பட்டோர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர். சீர்மரபினருக்கு 3.5 சதவீத இட ஓதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசானை வெளியீடு.
மார்ச் 11 ல் – குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது. மத்திய அரசு விதிமுறைகளை வெளியிட்டது.
மார்ச் 11ல் – புயலை கிளப்பிய தேர்தல் பத்திரம் – அரசியல் கட்சிகளின் தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் உடனே சமர்ப்பிக்க, ஸ்டேட் வங்கிக்கு மார்ச் 11ல் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் கமிஷன் மார்ச் 14ல் வெளியிட்டது. தேர்தல் பத்திரங்கள் மூலம் பாரதிய ஜனதா ரூபாய் 6 ஆயிரத்து 60 கோடி திரட்டியது தெரியவந்தது. மாநில கட்சிகள் பெற்ற நிதி விவரமும் வெளியானது. தி.மு.க. 639 கோடியும், அதிமுக 6 கோடியும் பெற்றதாக விவரம் வெளியானது.
மார்ச் 12 ல் – சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாரதிய ஜனதாவுடன் இணைத்தாா்.
மார்ச் 18ல் – தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுதரராஜன் திடீர் ராஜினாமா செய்தாா். அவர் பாரதிய ஜனதாவில் உறுப்பினராகி நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டா்.
மார்ச் 22ல் – புதுவை கவர்னராக சி.பி.ராதாகிருஷ்னன் பதவியேற்றாா்.
மார்ச் 22 ல் – பொன்முடி பதவிக்கு கெடுபிடி – வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 2023 ம் ஆண்டு டிசம்பா் 21ல் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதனையடுத்து அமைச்சர் மற்றும் எம்.எல்.டீ. பதிவியை அவர் இழந்தாா். இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொன்முடி மேல்முறையீடு செய்தாா். ஐகோர்ட்டு உத்தரவை நிறுத்தி வைத்து மார்ச்.13ல் சுப்சீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார். அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னர் மறுத்துவிட்டாா். அதற்கு சுப்ரீம் கண்டனம் தெரிவித்த பின்பு, மார்ச் 22ந் தேதி அமைச்சராக பதிவி பிரமாணம் செய்து வைத்தாா்.
மார்ச் 30 ல் – முன்னாள் துணை பிரதமர் அத்வானிக்கு பாரதரத்னா விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் சென்று வழங்கி கவுரவித்தாா். முன்னதாக மார்ச்.30ல் ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் நரசிம்ம ராவ், சவுத்ரி சரண் சிங், கா்பூரி தாகூர் மற்றும் எம்.எஜ்சுவாமிநாமன் ஆகியோருக்கான பாரத ரத்னா விருதுகளை அவர்களின் வாரிசுகளிடம் ஜனாதிபதி வழங்கினாா்.
ஏப்ரல்
ஏப்ரல் 6ல் – விக்ரவாண்டி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தாா்.
ஏப்ரல் 9- ல் எம்.ஜி.ஆர். கழகம் கட்சியை நடத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், முதுமை காரணமாக 98 வயதில் மரணம் அடைந்நதாா்.
ஏப்ரல் 19ல் – தமிழகத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் வக்குப்பதிவு நடந்தது இதில் 69.94 சதவீத வாக்குகள் பதிவானது.
ஏப்ரல் 21ல் – தூர்தர்ஷன் டி.வி. இலச்சினை காவி நிறத்தில் வெளியிடப்பட்டதற்கு மதல் – அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.
ஏப்ரல் 22ல் – பத்ம விருதுகள் – 2024-ம் ஆண்டிற்கான பத்ம விபூஷண் விருது 5 பேருக்கும் , பத்ம பூஷண் 17 பேருக்கும், பத்மஸ்ரீ 110 பேருக்குமாக மொத்தம் 132 பேருக்கு விருதுகள் ஜனவரி 26 ல் அறிவிக்கப்பட்டன. ஏப்ரல் 22ல் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயடு, பீகாரைச் சேர்ந்த சமூக சேவகர் பிந்தேஷ்வர் பதக் ( இறப்புக்கு பிறகு), பத்மா சுப்பிரமணியம் பத்ம விபூஷன் விருது பெற்றனா். மறைந்த சமூக சேவகர் பிந்தேஷ்வருக்கான் பத்ம விபூஷண. விருதை அவருடைய மனைவி பெற்றாா்.
எப்ரல் 24ல் – கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரம் ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல மாறியதால் பொதுமக்கள் பீதியடைந்தனா். மேகக்கூட்டத்தில் பாலைவன மண் துகள்கள் கலந்ததால் இந்த மாற்றம் சில நாட்கள் நீடிக்கும் என நாசா விளக்கம் அளித்தது. நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, பாடகி உஷா உதூப், தொழில் அதிபர் சீதாரம் ஜிந்தால், உத்திரபிரதேச மாநில முன்னாள் கவர்னர் நாம் நாயக் உள்ளிட்டோா் பத்ம பூஷன் விருது பெற்றனா். நசீம் பாணு, தக்திரா பேகம், தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளா் ஜோ டி குரூஸ், நாதஸ்வர கலைஞர் சேஷம்பட்டி தீர்த்தகிரி சிவலிங்கம், மேற்கு நியூ பிரிட்டன் மாகாண (பப்புவா நியூ கினியா) கவர்னர் சசிந்திரன் முத்துவேல் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. பத்ம விபூஷன் விருது அறிவிக்கப் பட்ட நடிகர் சிரஞ்சீவி , நடிகை வைஜெயந்தி மாலா. பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த் ( மறைவுக்கு பிறது) உள்பட மற்ற விருதாளர்களுக்கு அடுத்தடுத்த நாட்களில் விருது வழங்கப்பட்டது.
நிர்மலா தேவிக்கு தண்டனை- முக்கிய பிரபலங்களுக்கு ஒத்துழைக்கும் படி, கல்லூரி மாணவிகளை பாலியல் சீதியாக தவறாக வழி நடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலாதேிவி குற்றவாளி என்று கோர்ட்டு அறிவித்தது. மறுநாள் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் 21/2 லட்சம் அபாராதமும் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
மே மாதம்
மே 4ல் – நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாா் தன்சிங் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டாா். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கடிதம் எழுதி விட்டு மாயமானவர் எரித்துக் கொல்லப்பட்டாரா? எ்னறு போலீஸார் விசாரணை நடத்தினா்.
மே 9ல் – விஜயகாந்துக்கான பத்ம பூஷன் விருது, அவரது மனைவி பிரேமலதாவிடம் வழங்கப்பட்டது.
மே 10ல் – கெஜ்ரிவால் ராஜினாமா – அதிஷி புதிய முதல் – மந்திரி – மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், மார்சி – 21 ல் டெல்லி முதல் -மந்திரி கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. செப்டம்பர் 13ல் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து 6 மாதங்களாக திகார் சிறையில் இருந்த அவர் பிடுதலை செய்யப்பட்டாா். இடையில் மே.10 ல் தேர்தல் பிரசாரத்திற்காக 21 நாட்கள் இடைக்கால ஜாமீன் பெற்று வெளியே இருந்தாா். தான் நிரபராதி என்பதை மக்கள் அறிவிக்கட்டும் என்று கூறி, செப்டம்பர் 17ல் கெஜ்ரிவால் தனது முதல் – மந்திரி பதவியை ராஜினாமா செய்தாா். இதை தொடர்ந்து செப்டம்பா் 21ல் புதிய முதல் – மந்திரியாக அதிஷி பதவியேற்றாா்.
மே 13 ல் – (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகை எம்.பி.செல்வராஜ் மரணம்.
மே 19 ல் -ஈரான் அதிபர் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் மலையில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப் பட்டது. இதில் ஈரான் அதிபர் இப்ராகிம் சைசி பலியானாா். வெளியுறவு மந்திரி, மதகுரு உள்ளிட்வர்களும் பலியானார்கள்.
மே 30 ல் – சர்சையான தியானம் – நாடாளுமன்ற தேர்தலின் இறுதிக்கப்பட்ட பிராசாரம் மே30ல் ஓய்ந்தது. அன்றைய தினமே பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வந்து 3 நாள் தியானத்தை தொடங்கினாா். காவி உடை, நெற்றியில் திருநீறு குங்குமம், கையில் ருத்திராட்ச மாலையுடன் தியானத்தில் அமர்ந்த அவர் சூரிய உதயத்தை பாா்த்து சூரிய வழிபாடு நடத்திவிட்டு, மீண்டும் இரண்மாம் நாள் தியானத்ததை தொடர்ந்தாா். ஜூன் 1ல் அன்று இறுதிநாள் தியானத்தை கடைப்பிடித்த அவர். நிறைவாக தனி படகில் சென்று திருவ்ளளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினாா். இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடந்த சமயத்தில் மோடி தியானத்தில் இருந்தது தேர்தல் நடத்தை விதி மீறல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியதுடன், தேர்தல் ஆணையத்தில் புகாரும் அளித்தன.
ஜூன்
ஜூன் 3 ல் – நாடாளுமன்ற தேர்தலில் 64 கோடி பேர் வாக்களித்தது உலக சாதனையாக பதிவு.
ஜூன் 4ல் நாடாளுமன்ற தேர்தல் முடிவு வெளியானதில் தி.மு.க. கூட்டணி, புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளையும் அள்ளியது.
ஜூன் 4ல் – 3-வது முறையாக பிரதமரானாா் மோடி – நாடாளுமன்ற தேர்தல் முடிவு ஜூன் 4ல் வெளியானது. எந்த கட்சிக்கும் தனிப்போரும்பான்மை கிடைக்கவில்லை, பாரதிய ஜனதா கூட்டணி 296 இடங்களிலும், இந்தியா கூட்டணி 231 இடங்களிலும் வென்றது. தமிழகத்தில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி 39 இடங்களிலும் வெற்றி பெற்றது. நாம் தமிழர் 8.2 சதவீத வாக்குகளை பெற்று அங்காரம்பெற்ற கட்சியானது. பாரதிய ஜனதா கூட்டணி 11 சதவீத வாக்குகளை கைப்பற்றியது.
ஜூன் 4ல் – சபதத்தை நிறைவேற்றிய சந்திரபாபு நாயுடு ஜூன் 4ல் வெளியான ஆந்திர சட்டசபை தேர்தல் முடிவின் படி அபார வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடு ஆட்சியைப் பிடித்தார் முந்தைய ஆட்சியில் மனைவியை அவதூறாக பேசியதால் கண் கலங்கியபடி சபையை விட்டு வெளியேறி இனி முதல்வராக தான் சட்டசபைக்கு வருவேன் என்ற சபதம் ஏற்று சென்ற அவர் சபதத்தை நிறைவேற்றி இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 21 இல் முதல் மந்திரியாக சட்டசபைக்குள் நுழைந்தார். பவன் கல்யாண் துணை முதல் மந்திரி ஆனார்.
ஜூன் 9 ல் – மோடி பிரதமராக பதவி ஏற்றாா். நேருவுக்கு அடுத்தபடியாக தொடர்ச்சியாக 3 வது முறையாக பிரதமரானவர் என்ற பெருமையையும் பெற்றாா். அவருடன் புதிய அமைச்சரவையும் பொருப்பேற்றது. முன்னதாக (ஜூன் 8) நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் , ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராகவும், சோனியா காந்தி காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராகவும் தேர்வு செய்ப்பட்டனா்.
ஜூன் 9 ல் – புதிய மத்திய மந்திரி சபை ஜூன் 9 ல் பதவி ஏற்றது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த நிர்மலா சீதாராமன் ( நிதி கார்பரேட்நலன்), ஜெய்சங்கர்(வெளியுறவு) எல்.முருகன் (நாடாளுமன்ற விவகாரம், தகவல் ஒளிபரப்பு துறை) ஆகியோர் மத்திய மந்திரிகளாயினர்.
ஜூன் 18ல் பீகாரில் திறப்பு விழாவுக்கு முன்பே புதிய பாலம் இடிந்து விழுந்தது.
ஜூன் 18ல் – கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் ஜூன்- 18ம் தேதி விற்பனையான விஷ சாராயத்தை குடித்தவர்களில் 63 பேர் பலியானது பரபரப்பை ஏற்படுத்தியது. மாவட்ட கலெக்டர் இடமாற்றமும். போலீஸ் சூப்பிரண்டு பணியிடை நீக்கமும் செய்யப்பட்டனர். கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது .சிபிசிஐடி விசாரணையும் நடந்தது தமிழக அரசு சார்பில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூபாய் 10 லட்சம் வழங்கப்பட்டது. ஜூன் 29 இல் மதுவிலக்கு சட்டத்தில் கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10 லட்சம் அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றியது.
ஜூலை
ஜூலை 2ல் – ஆன்மீக கூட்டத்தில் 121 பேர் பலி – உத்தரபிரதேசத்தின் ஹத்ராசில் போலே பாபா என்ற சாமியார் ஜூலை – 2ம் தேதியில் நடத்திய ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியானார்கள். சாமியாரின் காலடி மண்ணை எடுக்க மக்கள் முண்டியடித்ததால் ,நேரிசல் ஏற்பட்டதாக தெரியவந்தது. விழா ஏற்பாட்டாளர்கள், கவனக்குறைவாக செயல்பட்ட அதிகாரிகள் கைது. சாமியார் போலே பாபா தலைமறைவானார்.
ஜூலை 4 ல் – விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க வெற்றி அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
ஜூலை 4 ல் – நெல்லை கோவை மேயர்கள் ராஜினாமா – திமுகவை வசமிருக்கும் நெல்லை (பிஎம் சரவணன்), கோவை (கல்பனா) மாநகராட்சிகளின் மேயர்கள் ஜூலை 4-ம் தேதி தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். ஆகஸ்ட்.6 – ராமகிருஷ்ணன் நெல்லை ஆர்.ரங்கநாயகி (கோவை )ஆகியோர் புதிய மேயர்கள் ஆயினர்.
ஜூலை 5 ல் – ஆம்ஸ்ட்ராங் கொலை – சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் ஜூலை – 5ல் படுகொலை செய்யப்பட்டார். உணவு வினியோகிப்பவர்கள் போல உடை அணிந்து வந்த ஆறு பேர் கும்பல் வெறிச்செயல். அடுத்தடுத்த நாட்களில் அந்த கொலையில் தொடர்புடைய பல்வேறு கட்சியினர், பெண் தாதா ,ரவுடிகள் என 24 பேர் கைது செய்யப்பட்டனர். ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்க 3 ஆண்டு காத்திருந்து தீர்த்ததாக குற்றவாளி வாக்குமூலம் அளித்தனர். மேலும் ரூபாய் ஒரு கோடி வரை கூலிப்படைக்கு கை மாறியதாகவும் கூறினர். ஜூலை 7ல் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த மாயாவதி தமிழகம் வந்தார். அவர் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்ற முதல் அமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி திருவேங்கடம் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடியதால் என்கவுண்டர் ஜூலை 14 செய்யப்பட்டார்.
ஜூலை 14 ல் – டிரம்ப் மீது துப்பாக்கி சூடு. தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜூலை 14ஆம் தேதி பேசிக்கொண்டிருந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு நடந்தது. குண்டு காதை உரசி சென்றது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆதரவாளர் ஒருவர் இறந்தார். இரண்டு பேர் படுகாயம்.
ஜூலை 15 ல் -அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் – அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் காலை உணவு திட்டத்தை ஜூலை 15ல் காமராஜரின் 122 வது பிறந்த நாளை ஒட்டி, திருவள்ளூர் மாவட்டம் கீச்சேரியில் உள்ள புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஜூலை 22ல் – மதுரையில் மாணவன் கடத்தல் வழக்கில் தனது பெயர் சேர்க்கப்பட்டதால் தூத்துக்குடி ஐ.ஏ.எஸ். அதிகாரி மனைவி சூர்யா குஜராத்தில் தங்கி இருந்த இடத்தில் 20-ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்தார். நாலு பக்க கடிதம் சிக்கியது.
ஜூலை 30ல் – கேரள மாநிலம் வயநாட்டில் ஜூலை 30ஆம் தேதி நல்லிரவில் இரண்டு மணிக்கு மேல் 50 சென்டிமீட்டர் மழை பெய்தது. நிலச்சரிவு ஏற்பட்டது. பல கிராமங்கள் மண்ணில் புதைந்தன பலி எண்ணிக்கை 400 ஐ தாண்டியது. தமிழர்கள் 30 பேர் மாயமானார்கள். மாநில பேரிடராக அறிவிக்கப்பட்டது .ராணுவம் தற்காலிக பாலம் அமைத்து புதை கொண்ட கிராமங்களில் சிக்கியவர்களை மீட்டது. இந்த நிலச்சரிவில் தையல் காரரின் கூட்டுக் குடும்பத்தில் 40 பேரும் ,மற்றொருவர் குடும்பத்தில் 16 பேரும் இறந்தனர்.
ஆகஸ்ட்
ஆகஸ்ட் 4. – வங்காளதேசத்தில் வன்முறை ஆட்சி மாற்றம் – வங்காளத்தில் ஆகஸ்ட் 4ஆம் தேதி மாணவர் போராட்டத்தால் மீண்டும் வன்முறை 91 பேர் கொல்லப்பட்டனர். மறுநாள் போராட்டக்காரர்கள் டாக்கா அரண்மனையை சூறையாடினர் . ராணுவ ஆட்சி அமலுக்கு வந்தது .பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். ஆகஸ்ட் 6 ல் வங்காளதேச நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. வங்காளத்தில் முன்னாள் பிரதமர் ஹசீனாவின் கட்சி தலைவரின் ஹோட்டலுக்கு தீ வைக்கப்பட்டது .24 பேர் உடல் கருகி இறந்தனர் .முன்னாள் கிரிக்கெட் வீரரின் வீடும் தீக்கிரையானது. முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு ஆகஸ்ட் 9ஆம் தேதி வங்காளத்தில் பதவியேற்றது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியும் ராஜினாமா செய்தார் வன்முறை தொடர்பாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆகஸ்ட் 9 ல் – கொல்கத்தா டாக்டர் கற்பழித்து கொலை – கொல்கத்தா பெண் டாக்டர் பணியில் இருந்த போது ஆகஸ்ட் 9 இல் கற்பழித்து கொல்லப்பட்டதை சுப்ரீம் கோர்ட் ஆகஸ்ட் 20 தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. மேற்கு வங்காள அரசுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் டாக்டர்கள் பாதுகாப்புக்கு தேசிய அளவில் குழு அமைத்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து மூன்று போலீஸ் அதிகாரிகளை மாநில அரசு பணியிடை நீக்கம் செய்தது. டாக்டர்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.ஆகஸ்ட் 12 ல் – சென்னை அருகே கவரப்பேட்டையில் சரக்கு ரயில் மீது பாகமதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்தில் 19 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
ஆகஸ்ட் 19ல் – தமிழகத்தின் புதிய தலைமை செயலாளர் ஆக என்.முருகானந்தம் நியமனம்.
ஆகஸ்ட் 30 ல் – மாணவிகள் விடிய விடிய போராட்டம் திருச்சி என். ஐ .டி யில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்யப்பட்டதை கண்டித்து ஆகஸ்ட் 30 ம் தேதி விடிய விடிய மாணவிகள் போராட்டம் நடத்தினர். பாலியல் புகாரில் ஒப்பந்த தொழிலாளி கைதானார்.
செப்டம்பர்
செப்டம்பர் 2 ல் – ஆறு அமைச்சர்களின் இலாகா மாற்றம் – உயர்கல்வித்துறை அமைச்சரான பொன்முடி வனத்துறையையும், நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரான தங்கம் தென்னரசு நிதி மற்றும் சுற்றுச்சூழல் நலத்துறையும், சுற்றுச்சூழல் அமைச்சரான மெய்ய நாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையையும், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சரான கயல்விழிக்கு மனிதவள மேம்பாட்டு துறையும், வனத்துறை அமைச்சரான மதிவேந்தனுக்கு ஆதிதிராவிட நலத்துறையும் ,பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரான ராஜ கண்ணப்பனுக்கு காதி மற்றும் பால்வள துறையும் ஒதுக்கப்பட்டன.
செப்டம்பர் 7 ல் – அரசு பள்ளிகளில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை வந்த போது விமான நிலையத்தில் போலீசார் மடக்கி கைது செய்தனர்.
செப்டம்பர் 10 ல்- வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் மரணம்.
செப்டம்பர் 12ல் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராமன் எச்சூரி மரணம்.
செப்டம்பர் 14 ல் – அமெரிக்காவில் மு க ஸ்டாலின்- தமிழக முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் 17 நாட்கள் அரசு முறை பயணமாக ஆகஸ்ட் 27-ல் அமெரிக்கா சென்றார். ஆகஸ்ட் 30 அமெரிக்காவில் முதலமைச்சர் பங்கேற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூபாய் 900 கோடி பரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர் செங்கல்பட்டில் ரூபாய் 400 கோடியில் புதிய தொழிற்சாலையும் , செப்டம்பர் 1 ல் – சென்னையில் ரூபாய் 200 கோடி முதலீட்டில் இன்ஜினியரிங் மையம் நிறுவுவதற்கும், செப்டம்பர் 4 ல் – தமிழகத்தில் ரூபாய் 2000 கோடியில் தொழில் மையம் அமைக்க அமெரிக்க நிறுவனத்துடனும் , செப்டம்பர் 5 ல் – சென்னை, செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் ,கோவை, மாவட்டங்களில் ரூபாய் 850 கோடி முதலீடு செய்ய 3 அமெரிக்க நிறுவனங்களுடனும் , செப்டம்பர் 6 ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. செப்டம்பர் 6ல் – அமெரிக்காவில் தமிழர்களுடன் முதலமைச்சர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. செப்டம்பர் 12ல் – திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கட்டுமான கருவி உற்பத்தி விரிவுபடுத்த கேட்டர்பில்லர் நிறுவனம் ரூபாய் 500 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தமும், முதலமைச்சர் அழைப்பை ஏற்று செப்டம்பர் 13ல் – போர்டு நிறுவனம் சென்னையில் மீண்டும் செயல்பட ஒப்பந்தமும் கையெழுத்தானது . செப்டம்பர் 14ல் – சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்து வந்ததாக தெரிவித்தார்.
செப்டம்பர் 22 ல் – இலங்கை அதிபர் தேர்தலில் யாருக்கும் பெரும் பன்மை கிடைக்காததால், இரண்டாவது சுற்று ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டதில் திசநாயக்கே அதிபராக தேர்வு செய்யப்பட்டாா்.
செப்டம்பர் 22ல் – பேராயர் எஸ்ரா சற்குணம் உடனரை குறைவு காரணமாக மரணம்.
செப்டம்பர் 23 ல் – தஞ்சாவூர் சேலம் மாவட்டங்களில் 60 கோடி செலவில் கட்டப்பட்ட மினி டைட்டில் பூங்காக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
செப்டம்பர் 28 ல் – உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆனார் – தமிழக அமைச்சரவை செப்டம்பர் 28ஆம் தேதி மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர்களாக இருந்த செஞ்சி மஸ்தான் ,இராமச்சந்திரன், மனோதங்கராஜ் ஆகியோர் நீக்கப்பட்டனர். அதற்கு பதில் செந்தில் பாலாஜி மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை, ஆவடி நாசர் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை , கோ.வி.செழியன் உயர்கல்வித்துறை, ராஜேந்திரன் சுற்றுலாத்துறை ஆகியோர் புதிய அமைச்சர்களாக செப்டம்பர் 29 இல் பதவி ஏற்றனர் .உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக நியமிக்கப்பட்டார்.
செப்டம்பர் 29 ல் – செந்தில் பாலாஜிக்கு ஜாமின் – அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டுகளுக்காக 2023 ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பலமுறை ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில் இரண்டு முறை உடல் நலம் பாதித்து சிகிச்சையும் பெற்றார் . 471 நாட்கள் சிறையில் இருந்த நிலையில் கடந்த செப்டம்பர் 26 ஜாமினில் வெளிவந்தார் . செப்டம்பர் 29ல் மின்சாரம், மதுவிலக்கு அமைச்சராக மீண்டும் பதவி ஏற்றார். ஜாமினில் வெளியே வந்த மூணு நாட்களில் அமைச்சராக பதவி ஏற்றதற்கு கோர்ட் கண்டனம் தெரிவித்தது.
அக்டோபர்
அக்டோபர் 2ல் – ஐகோர்ட் உத்தரவின் பேரில் கோவை ஈஷா யோகா மையத்தில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பரண்டு தலைமையில் அதிகாரிகள் குழு சென்று விசாரணை நடத்தியது. மறுநாள் ஈஷா யோகா மையத்தில் சோதனை நடத்த போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது.
அக்டோபர் 8 ல் – காஷ்மீர் ,ஹரியானா தேர்தல் முடிவு – காஷ்மீர் ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவு அக்டோபர் 8-ல் வெளியான நிலையில் காஷ்மீரை காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. நாலு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவர் உமர் அப்துல்லா முதல் மந்திரியானார். அமைச்சரவையில் காங்கிரஸ் சேரவில்லை .பாரதிய ஜனதா ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த அரியானாவில் நையாச்சிங் சைனி இரண்டாவது முறையாக முதல் மந்திரியாக பதவி ஏற்றார்.
அக்டோபர் 9 ல் – அரசு இல்லத்தில் இருந்து முதல் மந்திரி வெளியேற்றம் – டெல்லி அரசு இல்லத்தில் இருந்து அக்டோபர் 9 முதல் மந்திரி அதிஷியை மத்திய பொதுப் பணி துறையினர் பொருட்களை அப்புறப்படுத்தி வீட்டைப்பூட்டி சாவியை எடுத்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து வீட்டிற்கு வெளியே அட்டைப்பெட்டிகளுக்கு நடுவே இருந்து அதிஷி கோப்புகளை பார்த்தார். முன்னாள் முதல் மந்திரி அரவிந்த் கெஜர்வால் வீட்டு சாவியை முறைப்படி ஒப்படைடக்கவில்லை என்றும் அதிஷியும் முறைப்படி ஒப்புதல் பெற்று குடியேறவில்லை என்றும் மதிய பொதுப்பணித்துறையினர் குற்றம் சாட்டினர்.
அக்டோபர் 9 ல் – பிரபல தொழிலதிபர் ரத்தம் டாடா மரணம்.
அக்டோபர் 27 ல் – விஜய் கட்சி மாநாடு- விழுப்புரம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு அக்டோபர் 27 நடந்தது .விஜய் 45 நிமிடங்கள் மேடையில் பேசினார். அப்போது தி.மு.க தங்கள் அரசியல் எதிரி என்று பேசினார் .திராவிடமும் தமிழ் தேசியமும் இரு கண்கள் என்றும், பிளவுவாத சக்தியும் ஊழலுமே நம் எதிரிகள் என்றும் ,மதசார்பற்ற சமூக நீதி தங்கள் கொள்கை என்றும் ,அறிவித்தார். மாநாட்டில் லட்சக்கணக்கானவர்கள் திரண்டனர். ஆட்சியில் அதிகார பங்களிப்பு செய்யப்படும். இதை அரசியல் அணுகுண்டாக போடுகிறேன் என்று பேசியும் பரபரப்பை மூட்டினார். வெயில் கொடுமை தாங்காமல் 120 தொண்டர்கள் மயங்கி விழுந்தனர் ,மாநாட்டிற்கு வரும் வழியில் விபத்தில் தொண்டர்கள் நாலு பேர் இறந்தனர் . பிப்ரவரி இரண்டில் தனது கட்சியின் பெயரை அறிவித்த விஜய் .கட்சிக்கொடியை ஆகஸ்ட் 22ல் சென்னை பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் அறிமுகப்படுத்தினார்.
நவம்பர்
நவம்பர் 6 ல் – சூரியனார் கோவில் அதினம் மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் (54 வயது) திருமணம் செய்து கொண்டார். இதனால் நவம்பர் 12ல் ஆதீனத்தை வெளியேற்றி மடத்துக்கு கிராம மக்கள் ஓட்டு போட்டனர்.
நவம்பர் 6ல் – மீண்டும் வந்தார் டொனால்ட் டிரம்ப் – அமெரிக்க தேர்தல் முடிவை நவம்பர் 6ல் வெளியானது .அதில் டொனால்ட் டிரம்ப் (78 ) வெற்றி பெற்றார் .அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தோல்வியடைந்தார். கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு வழக்குகளை எதிர் கொண்ட டிரம்ப் இந்த வெற்றியின் மூலம் வருகிற ஜனவரி 20 ல் அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். அவரது கட்சியை சேர்ந்த ஜே.டி.வான்ஸ் துணை ஜனாதிபதியாகிரார். இதனால் இவருடைய மனைவி உஷா அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணி அந்தஸ்தை பெற்றார் . அவர் இந்தியாவில் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர். அமெரிக்காவில் அமையும் புதிய அரசில் எலான் மாஸ்க் மற்றும் விவேக் ராமசாமிக்கு முக்கிய பதவி வழங்கப்படுவதாக ட்ரம்ப் அறிவித்தார். ட்ரம் பெட்டியை தொடர்ந்து அவரது நண்பரான எலான் மாஸ்கின் பங்குகள் விலை கணேசமாக உயர்ந்தது. நவம்பர் 23 ல் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு ரூபாய் 29 லட்சம் கோடியை கடந்து உலக வரலாற்றிலேயே பெரும் பணக்காரரானார்.
நவம்பர் 11ல் – தொடரும் மணிப்பூர் கலவரம் மணிப்பூரில் சி ஆர் பி எஃப் முகாம் கடைகள் வீடுகளுக்கு தீ வைத்து வெறியாட்டம் போட்ட 11 பயங்கரவாதிகள் சி .ஆர். பி .எப் பதிலடியில் கொல்லப்பட்டனர். அங்கு இரண்டு பேரை உயிருடன் எரித்துக் கொண்ற பயங்கரவாதிகள் 3 பெண்கள்,3 குழந்தைகள் என 6 பேரை கடத்திச் சென்றனர். தேடப்பட்டு வந்த அவர்கள் ஆறு பேரும் நவம்பர் 15 ,16 தேதிகளில் பிணமாக மீட்கப்பட்டனர் .இதை அடுத்து 17ஆம் – தேதி மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களின் வீடுகள் சூறையாடப்பட்டன.
நவம்பர் 20 ல் – மணிப்பூர் ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக தமிழ்நாட்டை சேர்ந்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார் நியமனம் மறுநாள் அவர் பதவியேற்றார்.
நவம்பர் 21ல் – அதானிக்கு பிடிவாரண்டு – சூரிய ஒளி மின்சார ஒப்பந்தம் பெற இந்திய அதிகாரிகளுக்கு ரூபாய் 2,200 கோடி லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்காவில் முதலீடுகளை திரட்டியதாக இந்திய தொழில் அதிபர் அதானி மீது நியூயார்க் கோட்டில் வழக்கு தொடரப்பட்டது . அவருக்கு நவம்பர் 21 பிடிவாரண்ட் பிறப்பித்து அந்த நாட்டு கோர்ட் உத்தரவிட்டது. இதை அடுத்து கென்யா நாடு அதானி குழும ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அடுத்தடுத்த நாட்களில் அது ஆணி குழும பங்குகள் கடும் சர்வை சந்தித்தது.
நவம்பர் 21 ல் – நடிகர் ரஜினிகாந்தை, சீமான் இரவில் திடீரென சந்தித்து பேசினாா்.
நவம்பர் 27 ல் – நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப விழா கோர்ட் உத்தரவு .
டிசம்பர்
டிசம்பர் 2 ல் – அவதூறு வழக்குகளில் பா.ஜனதா முக்கிய பிரமுகர் எச்.ராஜாவுக்கு தனித்தனியாக 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவிட் டது.
டிசம்பர் 3 ல் – முன்னாள் துணை முதல்-மந்திரியை கொல்ல முயற்சி – சீக்கிய மத அமைப்பு விதித்த தண்டனையால், டிச.3ல் பொற்கோவில் கழிப்பறையை முன்னாள் மந்திரிகள் சுத்தம் செய்தனர். இதேபோல் பொற்கோவில் வாசலில் 2 நாட்கள் காவலர்களாக பணியாற்ற வேண்டும் என்ற தண்டனை பெற்ற முன்னாள் துணை முதல்-மந்திரி சுக்பீர் சிங் பாதல், முன்னாள் மத்திய மந்திரி சுக்தேவ் சிங் ஆகியோரும் பணியை தொடங்கினர். மறுநாள் அங்கு பணியில் இருந்த சுக்பிர்சிங் பாதலை சுட்டுக் கொல்ல முயற்சி நடந்தது. இதுதொடர்பாக முன்னாள் பயங்கரவாதி நரைன்சிங் சாவ்ரா கைது செய்யப்பட்டார்.
டிசம்பர் 4 ல் – அல்லு அர்ஜுன் கைது. – தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா-2 திரைப்படம் டிச.4 அன்று திரைக்கு வந்தது. ஐதராபாத்தில் ஒரு தியேட்டரில் படத்தை பார்க்க வந்த அல்லு அர்ஜூனை காண திரண்ட கூட்டத்தில் சிக்கி பெண் ரசிகை உயிரிழந்தார். அவருடைய மகன் கோமா நிலைக்கு சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டிச.21ல் அல்லு அர்ஜூனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மறுநாள் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தெலுங்கானா முதல்-மந்திரி ரவெந்த் ரெட்டி சிறப்பு காட்சி களுக்கு இனி அனுமதி கிடையாது என்றும், நடிகர்கள் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்களே பார்த்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
டிசம்பர் 5 ல் – இழுபறிக்கு பிறகு தேர்வான மராட்டிய முதல்-மந்திரி- மராட்டிய சட்டமன்ற தேர்தலில் (நவ.23) பா.ஜனதா(132), சிவசேனா (57), தேசியவாத காங்கிரஸ் (41) என 230 தொகுதிகளை கைப்பற்றிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஜார்கண்ட் மாநில தேர்தல் முடிவில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. அம்மாநில முதல்-மந்திரியாக (நவ.28) ஹேமந்த் சோரன் பதவியேற்றார். மராட்டியத்தில் புதிய முதல்-மந்திரி யார் என்பதை முடிவு செய்வதில் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவின் பிடிவாதத் தால் தாமதானது. 11 நாட்கள் இழுபறிக்கு பிறகு டிச.5ல் பா.ஜனதாவின் தேவேந்திர பட்னாவிஸ் பிரதமர் மோடி முன்னிலையில் முதல்-மந்திரியாக பதவியேற்றார். துணை முதல்-மந்திரிகளாக ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா), அஜித்பவார் (தேசியவாத காங் கிரஸ்) பொறுப்பேற்றனர்.
டிசம்பர் 7 ல் – இறுமாப்புடன் 200 தொகுதிகளில் வெல்வோம் என்ற தி.மு.க.வின் கூட்டணி கணக்கை மக்களே ‘மைனஸ்’ ஆக்கி விடுவார்கள் என்று சென்னையில் நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசினார். இந்த விழாவில் தி.மு.க.வை விமர்சித்து பேசிய விடு தலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவை (டிச.9) கட்சியில் இருந்து 6 மாதம் இடைநீக்கம் செய்வதாக திருமாவளவன் அறிவித்தார். இதைத்தொடர்ந்து (டிச.15) அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜூனா அறிவித்தார்.
டிசம்பர் 11ல் – உத்தரபிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப் பட்டதாக 180 ஆண்டு பழமையான நுரி ஜமா மசூதி இடிக்கப்பட்டது.
டிசம்பர் 14 ல் – காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்(வயது 75) உடல் நலக்குறைவால் மரணம்.
டிசம்பர் 24 ல் – டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு – மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டி, அரிட்டா பட்டியில் டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரி 30 கிராம சபை கூட்டங்களில் (நவ.23) தீர்மானம். அரிட்டா பட்டி கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பெரியபுள்ளான்(அ.தி.மு.க.), வெங்கடேசன்(தி.மு.க.) பங்கேற்றனர். டங்ஸ்டன்’ சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரும் தீர்மானம்(டிச.9) தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது. கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய அரசு டிச.24ல் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.
டிசம்பர் 26ல் – மன்மோகன்சிங் மரணம் பொருளாதார நிபுணரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங்(92) டிச.26ல் மரணம் அடைந்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் 1991-1996 வரை நிதி மந்திரியாக இருந்தபோது தாராளமயமாக்கல் உள்பட பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர். 2004-2014 வரை 10 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தவர்.
2024ல் இந்த ஆண்டு இந்தியாவை உலுக்கிய பெரிய சைபர் தாக்குதல்கள்..!