கபா டெஸ்டுக்குப் பிறகு தனது சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்துள்ள இந்தியாவின் புகழ்பெற்ற பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், களத்தில் தனது தீவிர ஆட்டத்திற்காக எப்போதும் நிலைவில் இருப்பார். களத்தில் எப்போதும் அஸ்வின் ஆளுமையாக இருந்துள்ளார். ஆனால் அஷ்வின் அதற்கு நேர்மாறாக பதிலளித்துள்ளார். அஸ்வின் தனது ‘ஐ ஹேவ் தி ஸ்ட்ரீட்ஸ்: எ குட்டி கிரிக்கெட் ஸ்டோரி’ என்ற புத்தகத்தில், நான் கடினமான ஆள் கிடையாது. விளையாட்டை ரசிக்கவில்லை என்பது ஒரு கட்டுக்கதை என்று கூறியுள்ளார்.
முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் அதர்டன் ஸ்கை ஸ்போர்ட்ஸ் பாட்காஸ்டில் அவரது புத்தகத்தைப் பற்றி அவரிடம் பேசியுள்ளார். அஸ்வின் கூறுகையில், ‘நான் யார் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்பினேன். ஏனென்றால் பல முறை, அஸ்வின் ஒரு விக்கெட்டை வீழ்த்துகிறார். விராட் கோலி எல்லா இடங்களிலும் இருக்கிறார். அவர் சும்மா குதிக்கிறார். அஷ்வின் மட்டும் சீரியஸாக இருக்கிறார். விராட் தான் ஜாலியாக இருக்கிறார் என்று மக்கள் அடிக்கடி நினைத்துக் கொள்கிறார்கள்.

ஒருவர் என்னிடம், நீங்கள் ஏன் எப்போதும் சீரியஸாக இருக்கிறீர்கள்? கேள்வி கேட்டார். இதற்கு எனது பதில், முதலில், நான் ஒருபோதும் தீவிரமான நபராக இருந்ததில்லை. ஆனால் நாட்டிற்காக ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற பந்து என் கையில் இருக்கும்போது, நான் செயல்பாட்டில் இருப்பதால் என் மனம் சிக்கிக்கொண்டது.
அஸ்வின் மேலும் கூறுகையில், ‘அடிக்கடி, நான் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி, டிரஸ்ஸிங் அறையிலோ, விருந்தினர் பாக்ஸிலோ அமர்ந்திருக்கும் என் மனைவிக்கு பேட்டில் முத்தம் கொடுப்பதை நீங்கள் பார்க்கவில்லை. சில நிலையை அடைந்த பிறகு, பார்வையாளர்களில் அமர்ந்திருக்கும் மனைவியை அவர் முத்தமிடமாட்டேன்’. இதனால் அஸ்வின் எவ்வளவு கடினமானவராக இருப்பார் என்று மக்கள் நினைக்கிறார்கள். இதை எனது புத்தகத்தில் கொண்டு வர விரும்பினேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

அஸ்வின் மேற்சொன்ன விஷயங்களை எல்லாம் விளையாட்டு மைதானத்தில் இருந்து செய்வது விராட் கோலியின் வழக்கம். அஸ்வின் அவரை மேற்கோள் காட்டி கூறியிருப்பது கோலியை கிண்டல் அடித்துள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகின்றனர்.
ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அவரது மனைவி ப்ரீத்தி நாராயணனை பள்ளி காலத்திலிருந்தே தெரியும். பின்னர் இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியில் சந்தித்தனர். இதையடுத்து அஸ்வின் ப்ரீத்தியிடம் காதலை வெளிப்படுத்தினார். ப்ரீத்தியும் அஸ்வினின் காதலை ஏற்றுக் கொண்டார். பின்னர் இந்த ஜோடி கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டது. இப்போது இருவரும் இரண்டு பெண் குழந்தைகளின் பெற்றோர்