spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுமெல்போர்ன் டெஸ்ட்: பறிபோகும் கே.எல் ராகுல் இடம்... இந்திய அணியின் மோசமான முடிவு..!

மெல்போர்ன் டெஸ்ட்: பறிபோகும் கே.எல் ராகுல் இடம்… இந்திய அணியின் மோசமான முடிவு..!

-

- Advertisement -

மெல்போர்னில் நடைபெறவுள்ள பாக்சிங் டே டெஸ்டில், தொடரின் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளைப் போல் கே.எல்.ராகுல் ஓபனிங்க் பேட்ஸ்மேனாக களம் இறங்க மாட்டார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ரோஹித் சர்மா ஓப்பனிங் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. கே.எல்.ராகுல் மூன்றாவது இடத்தில் பேட் செய்ய உள்ளார்.

இதுவரை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது சுப்மான் கில் 3வது இடத்தில் விளையாடி வந்தார். ஆனால், மெல்போர்னில் ராகுல் மூன்றாவது இடத்தில் விளையாடுகிறார். சுப்மான் கில் 4-வது இடத்தில் பேட்டிங் செய்கிறார்.

we-r-hiring

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பெர்த்தில் இருந்து பிரிஸ்பேன் வரை விளையாடிய முதல் 3 டெஸ்ட் போட்டிகளிலும் கே.எல்.ராகுல் ஒவ்வொரு இன்னிங்சையும் தொடங்கினார். இந்த 3 டெஸ்டில் 6 இன்னிங்ஸ்களில் 47 சராசரியுடன் 235 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் நடப்பு டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்தத் தொடரில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்களை எடுத்ததன் அடிப்படையில் டிராவிஸ் ஹெட்டுக்குப் பிறகு இரண்டாவது பேட்ஸ்மேனாக அவர் உள்ளார்.

ராகுல் மொத்தம் 5 இன்னிங்ஸ்களில் விளையாடி 17.60 சராசரியில் 88 ரன்கள் எடுத்துள்ளார். எந்தவொரு டாப் பேட்டிங் ஆர்டரிலும் இது நிச்சயமாக அவரது மோசமான சாதனையாகும். அதுமட்டுமின்றி, ராகுல் கடைசியாக 6 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2018-ல் இந்த மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்தார்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது ஓப்பனிங்கில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட ராகுலின் நிலையை மாற்றியமைப்பது சரியான முடிவாக தெரியவில்லை என்பது தெளிவாகிறது. அவரை 3வது இடத்தில் விளையாடும் இந்திய அணியின் நடவடிக்கை பின்னடைவை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

MUST READ