டெல்லியில் நடந்த தற்கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புனித் குரானா என்பவர், டிசம்பர் 30 அன்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புனித் தனது மனைவி மாணிகாவுடன் தகராறு செய்து வந்ததே இந்தத் தற்கொலைக்கு காரணம். இந்தத் தகராறு ஒன்றிரண்டு ஆண்டுகள் அல்ல. ஆறெழு ஆண்டுகளாக தொடந்துள்ளது.
கணவன் -மனைவி இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். விவாகரத்து தொடர்பாக, இருவருக்கும் இடையே பேச்சு வார்த்தை நடக்கும் போதெல்லாம், பிரச்சனைகள் தீர்க்கப்படுவதற்கு பதிலாக அதிக சிக்கலாகி உள்ளது. இருவரும் பேக்கரி தொழில் செய்து வந்ததால், அதிலிருந்து பிரிந்து செல்ல முடியவில்லை.

அந்தத் தொழிலில் பார்ட்னராக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் அடிக்கடி சந்திக்க வேண்டிய சூழல்.
இந்நிலையில், டெல்லி மாடல் டவுன் கல்யாண் விஹாரில் வசித்து வந்த 40 வயதான புனித் குரானா டிசம்பர் 30ஆம் தேதி மாலை, வீட்டில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனை அறிந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்து, புனித்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கைவிரித்தனர்.
போலீசார் புனித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி தற்கொலைக்கான காரணத்தை அவரது தாய், சகோதரியிடம் விசாரணை நடத்தி அறிந்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பிறகு தங்கள் மகன் எவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டார் என்று அவரது தாய் விவரித்தார். புனித்தின் தாய் 2016 ஆம் ஆண்டில், தனது மகனுக்கு மிகவும் ஆடம்பரமாகவும் நிகழ்ச்சியாகவும் திருமணம் நடந்ததாக கூறினார். மருமகள் வீட்டிற்கு வந்தாள், எல்லாம் நன்றாக இருந்தது. இருவரும் சேர்ந்து பேக்கரி தொழிலை ஆரம்பித்து நல்லபடியாக நடந்தது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, இருவருக்கும் இடையே தகராறு தொடங்கியது.
சமாதானப்படுத்த நாங்கள் நிறைய முயற்சித்தோம், ஆனால் புனித்தின் மனைவி விவாகரத்து செய்ய முடிவு செய்தார். பின்னர் ஒரு நாள் புனித்தும், அவரது மனைவி மாணிகாவும் பரஸ்பர சம்மதத்துடன் நீதிமன்றத்தில் விவாகரத்து மேல்முறையீடு செய்தனர். விவாகரத்து மேல்முறையீட்டிற்குப் பிறகு, மருமகள் வீட்டை விட்டு வெளியேறி தனது தாய் வீட்டிற்குச் சென்றார். சில நாட்களுக்குப் பிறகு, என் மகன் என் மகனை பணத்திற்காக சித்திரவதை செய்ய ஆரம்பித்தார்கள்.
இருவரும் பேக்கரி தொழிலில் பாதிக் கூட்டாளிகள் என்பதால், பணப் பரிவர்த்தனை தொடர்பாக தினமும் மிரட்டி சித்ரவதை செய்து வந்தனர். என் மகன் நேர்மையாக இருந்தான். 6 வருடங்களாக சித்திரவதைகளை எதிர்கொண்டு சோர்வடைந்தான். இதனால்தான் அவன் தற்கொலை செய்து கொண்டான்’’ எனக் கூறி புனித்தின் அம்மா சத்தமாக அழ ஆரம்பித்தார்.
புனித்தின் இன்ஸ்டாகிராமை மனைவி மாணிகா ஹேக் செய்துள்ளார். இதுகுறித்து புனிதத்தின் சகோதரி லீனா கூறுகையில், ‘‘விவாகரத்து வழக்கு சுமார் 6 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த விவாகரத்து வழக்கு இந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி இறுதி செய்யப்பட இருந்தது. சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்தன. இதன் காரணமாக அந்தத் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
அண்ணி மாணிக்கமும் அவரது மாமியாரும் எனது சகோதரனை மிகவும் சித்திரவதை செய்ததார்கள். மைத்துனி அண்ணனின் மின்னஞ்சல் ஐடியைக் கேட்டு அவரது இன்ஸ்டாகிராமை ஹேக் செய்துள்ளார். அண்ணன் போன் செய்து, எல்லாம் கோர்ட் படி நடக்குது, அப்புறம் என்ன பிரச்சனை என்று சொன்னதும், அண்ணி அவனை திட்ட ஆரம்பித்தாள்.
ரோகிணியில் எங்களுக்கு ஒரு வீடு இருந்தது. அண்ணனை மாமியார் ஏமாற்றி வீட்டை விற்றனர். பணத்தை நானே வைத்து, அதற்கு வட்டி தருகிறோம் என்று சொல்லி ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. பிறகு எங்காவது பிளாட் வாங்கி தருவதாக கூறினார்கள். அதையும் வாங்கித் தரவில்லை. சில நாட்களுக்குப் பிறகு, அண்ணி பெயரில் ஒரு பிளாட் வாங்கப்பட்டது தெரிய வந்தது. இந்த அடுக்குமாடி குடியிருப்பை எனது தந்தையின் பெயரில் எழுதி வைக்கக் கேட்டபோது அவர் மறுத்துவிட்டார்கல். இதனால் மேலும் பிரச்னை எழுந்தது’’ என தெரிவித்துள்ளார்.
புனித் குரானாவுடன் மனைவி மாணிகாவின் கடைசி உரையாடல்
புனித், ஆடியோ வைரலாகி வருகிறது. இதில் புனித் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டது குறித்து தொடங்கிய உரையாடல் விவகாரம், விவாகரத்து, வணிகம், தற்கொலை என்று முடிந்தது. உரையாடலின் போது புனித் உனக்கு என்ன? வேண்டும் என்று கேட்டார். அப்போது மாணிகா, புனித்தை மிரட்டி, நாளை காலை வருகிறேன். பிறகு சொல்கிறேன் என்று மிரட்டியுள்ளார்.
ஆனால், புனித் சந்திக்க மறுத்துவிட்டார். இது குறித்து ஆத்திரமடைந்த அவர், முன்வருவதற்கு உங்களுக்கு தைரியம் இல்லை என்றால் இரவு 3 மணிக்கே இவ்வளவு வீண் பேச்சு ஏன்? எனக் கேட்டு வெறுப்பேற்றினார்.
இதையடுத்து புனித்தின் மனைவி மாணிகா கூறுகையில், அவர் வேறு பெண்களை சந்திப்பது வழக்கம். ஏன் சந்தித்தார்..? அதுதான் இந்த தற்கொலைக்கு காரணம் எனத் தெரிவித்தார்.