தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா. கோலிவுட், டோலிவுட் திரையுலகில் விஜய், அஜித், போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டுள்ளார். அதே போல் பாகுபலி படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
கடந்த சில வருடங்களாக, நடிகை தமன்னா தென்னிந்திய மொழிகளை விட பாலிவுட் படங்களில் நடிப்பதில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான லஸ்ட் ஸ்டோரி 2 என்கிற வெப் தொடரில் நடித்த போது, அதில் தனக்கு ஜோடியாக நடித்த, விஜய் வர்மாவை காதலிக்க துவங்கினார். இந்நிலையில் தமன்னாவின் காதலர் விஜய் வர்மா தனக்கு இருக்கும் அரிய வகை தோல் வியாதி பற்றி கூறியுள்ளார்.

சமீபத்தில் இவர் வலைத் தொடருக்கான விளம்பரத்தில் கலந்து கொண்ட போது… தனக்கு இருக்கும் விடிலிகோ என்ற தோல் பிரச்சனை குறித்து பேசியுள்ளார். இது தமிழில் வெண்புள்ளி என்று அழைக்கப்படுகிறது. இது தொற்று நோய் அல்ல. இதனால் தனது முகத்தில் வெள்ளைப் புள்ளிகள் தோன்றும், அவற்றை மறைக்க மேக்கப், அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்றார். இந்த விஷயத்தில் முதலில் பயந்ததாகவும் விஜய் வர்மா கூறியுள்ளார்.
ஆனால் சினிமாவில் வெற்றி பெற்ற பிறகு இந்த விஷயத்தைப் பற்றி யோசிப்பதை நிறுத்தி விட்டதாகக் கூறுகிறார் விஜய் வர்மா. தமன்னாவும் விஜய் வர்மாவும் நீண்ட காலமாக காதலித்து வருகின்றனர். இந்த ஆண்டு விஜய்- தமன்னா திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் வர்மா ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்து பாலிவுட்டில் பிரபலமானார். விஜய் வர்மாவின் இந்த நோய் கவலைபடும்படியான பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.