spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅலையில் இழுத்துச்செல்லப்பட்ட சிறுவனை மீட்ட ஊர்க்காவல் படைவீரர்... கண்ணீர்மல்க நன்றி தெரிவித்த பாட்டி!

அலையில் இழுத்துச்செல்லப்பட்ட சிறுவனை மீட்ட ஊர்க்காவல் படைவீரர்… கண்ணீர்மல்க நன்றி தெரிவித்த பாட்டி!

-

- Advertisement -

சென்னை காசிமேட்டில கடல் அலையில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்ட சிறுவனை, ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு மீட்ட சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.

we-r-hiring

சென்னை காசிமேடு என்.4 கடல் பகுதியில் தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரை சேர்ந்த ஜான் என்ற சிறுவன் கடலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் ஜான் ராட்சத அலையால் இழுத்துச் செல்லப்பட்டார். கடலில் சிறுவன் தத்தளிப்பதை, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காசிமேடு மீன்பிடித்துறைமுக காவல் நிலையத்தை சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் தினேஷ் என்பவர் பார்த்துள்ளார். இதனை அடுத்து, அவர் உடனடியாக கடலில் குதித்து அலையில் தத்தளித்துக்கொண்டிருந்த சிறுவன் ஜானை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தார்.

துரிதமாக செயல்பட்டு சிறுவனின் உயிரை காப்பாற்றிய ஊர்க்காவல் படை வீரர் தினேஷுக்கு, சிறுவனின் பாட்டி கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்துகொண்டார். இதனை தொடர்ந்து, சிறுவன் உறவினர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவத்தை காசிமேடு  பகுதியை சேர்ந்த பொதுமக்களும் ஊர்க்காவல் படை வீரருக்கு வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

MUST READ