Homeசெய்திகள்சினிமாஅஜித் பிறந்தநாளில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ'?

அஜித் பிறந்தநாளில் வெளியாகும் சூர்யாவின் ‘ரெட்ரோ’?

-

- Advertisement -

சூர்யாவின் ரெட்ரோ படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.அஜித் பிறந்தநாளில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ'?

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். இவரது நடிப்பில் தற்போது சூர்யா 45 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் புதிய படம் உருவாகி வருகிறது. அதற்கு முன்னதாக நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரெட்ரோ எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். சூர்யாவின் 44 வது படமான இந்த படத்தினை சூர்யாவும் கார்த்திக் சுப்பராஜும் இணைந்து தயாரித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்க ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்த படத்தில் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது.அஜித் பிறந்தநாளில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ'? அதே சமயம் இப்படம் 2025 கோடையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் 2025 ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏப்ரல் 10ஆம் தேதி தனுஷின் இட்லி கடை மற்றும் அஜித்தின் குட் பேட் அக்லி ஆகிய படங்கள் திரைக்கு வருவதால் ரெட்ரோ படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே இப்படத்தினை மே 1ஆம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது. மே 1 அன்று நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ