spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'துருவ நட்சத்திரம்' படம் கண்டிப்பாக வெளியாகும்..... கௌதம் வாசுதேவ் மேனன் பேட்டி!

‘துருவ நட்சத்திரம்’ படம் கண்டிப்பாக வெளியாகும்….. கௌதம் வாசுதேவ் மேனன் பேட்டி!

-

- Advertisement -

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தமிழ் சினிமாவில் மின்னலே படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவர் விண்ணைத்தாண்டி வருவாயா, காக்க காக்க, வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு என பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். 'துருவ நட்சத்திரம்' படம் கண்டிப்பாக வெளியாகும்..... கௌதம் வாசுதேவ் மேனன் பேட்டி!இவரது இயக்கத்தில் தற்போது டொமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் கௌதம் மேனன் இயக்கத்திலும் விக்ரமின் நடிப்பிலும் உருவாகி இருந்த துருவ நட்சத்திரம் திரைப்படம் நீண்ட வருடங்களாக ரிலீஸ் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இதே போன்று கிட்டத்தட்ட 12 வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட மதகஜராஜா திரைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வெற்றி நடை போட்டு வருகிறது. எனவே சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கௌதம் வாசுதேவ் மேனனிடம் மதகஜராஜா திரைப்படம் நீண்ட வருடங்களுக்கு பின்னர் வெளியானதை போல் துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகுமா? என்பது போன்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு கௌதம் மேனன், “மதகஜராஜா திரைப்படம் வெற்றி பெற்றதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தாமதமாக வெளியாகும் படங்கள் கூட ரசிகர்களை வெகுவாக கவர்கிறது என்பது எனக்கு உத்வேகத்தை தருகிறது. துருவ நட்சத்திரம் திரைப்படமும் கண்டிப்பாக வெளியாகும். அந்தப் படம் இப்பொழுதும் போன வாரம் எடுக்கப்பட்ட படம் போல் தான் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ