spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதனுஷ் பட நடிகர் காலமானார்.... திரையுலகினர் இரங்கல்!

தனுஷ் பட நடிகர் காலமானார்…. திரையுலகினர் இரங்கல்!

-

- Advertisement -

தனுஷ் பட நடிகர் விஜய ரங்கராஜு காலமானார்.தனுஷ் பட நடிகர் காலமானார்.... திரையுலகினர் இரங்கல்!

தெலுங்கு திரை உலகில் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விஜய ரங்கராஜு. அந்த வகையில் இவர், பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பைரவ தீவிபம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அடுத்தது இவர் தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் கன்னட மொழியிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் கூட ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருக்கும்போது விஜய ரங்கராஜுவுக்கு காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. எனவே இதன் காரணமாக விஜய ரங்கராஜு சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். தனுஷ் பட நடிகர் காலமானார்.... திரையுலகினர் இரங்கல்!அப்போது விஜய ரங்கராஜுவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு விஜய ரங்கராஜு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி வருகிறது. இவருடைய மறைவிற்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ