spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஇங்கி.க்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: ரோகித் அதிரடியால் இந்திய அணி  அபார வெற்றி

இங்கி.க்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: ரோகித் அதிரடியால் இந்திய அணி  அபார வெற்றி

-

- Advertisement -

கட்டாக்கில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தியது.

we-r-hiring

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி-20  தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி  வென்றது. இதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடை பெற்ற முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 304 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்க எடுத்தார். இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 305 ரன்கள் எடுததால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்க முதலே அதிரடியாக வளையாடி ரன்களை குவித்தது. தொடக்க வீரர்களான கேப்டன் ரோகித்சர்மா 119 ரன்களும், கில் 60 ரன்களும் குவித்து நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். எனினும் நடுவரிசை வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த அக்சர் படேல் – ஜடேஜா ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தனர். இந்திய அணி 44.3 ஒவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்து, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-0 என கைப்பற்றியுள்ளது.

MUST READ