spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகமர்சியல் படங்கள் எல்லாம் தூக்கி அடிக்கப்படும்  - சமுத்திரக்கனி  பேச்சு

கமர்சியல் படங்கள் எல்லாம் தூக்கி அடிக்கப்படும்  – சமுத்திரக்கனி  பேச்சு

-

- Advertisement -

சினிமாவில் ஒரு நாள் வரும் …அன்று இது போன்ற படங்கள் தான் நிலைத்து நிற்கும் … கமர்சியல் படங்கள் எல்லாம் தூக்கி அடிக்கப்படும்… அதை நோக்கி தான் நகர்ந்து கொண்டு  இருக்கிறோம் – சமுத்திரக்கனி பேசியுள்ளாா்.கமர்சியல் படங்கள் எல்லாம் தூக்கி அடிக்கப்படும்  - சமுத்திரக்கனி  பேச்சு

 

we-r-hiring

சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள  ராமம் ராகவம் திரைபடத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சமுத்திரக்கனி மற்றும் சிறப்பு விருந்தினராக நடிகர் தம்பி ராமையா, பிக் பாஸ் பிரபலம் முத்து குமரன், நடிகர் தீபக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகர் தம்பி ராமையா பேசுகையில், சமுத்திரக்கனி, நல்லகண்ணு அய்யா போல் வாழ வேண்டும். கம்பர் தான் முதன் முதலில் “ஃபீல் குட்“ என்பதை அறிமுகப்படுத்தியவர் என பேசியுள்ளாா்.

கமர்சியல் படங்கள் எல்லாம் தூக்கி அடிக்கப்படும்  - சமுத்திரக்கனி  பேச்சு

அவரை தொடர்ந்து ஸ்டண்ட் சில்வா பேசுகையில், சித்திரை செவ்வானம் படம் எடுக்கும் வரை  என்னை பார்த்து நிறைய பேர் பயப்படுவார்கள். குறிப்பாக பெண்கள். என்னை மிகவும் மென்மையான ஆளாக மாற்றியவர் சமுத்திரக்கனி தான் என்று கூறினாா்.

இறுதியாக பேசிய நடிகர் சமுத்திரக்கனி, இந்த படத்தை பார்த்து ஏதோ ஒரு குடும்பத்தில் உள்ள  ஒரு மகன்  திருந்தினால் கூட இந்த படம் வெற்றிதான். நாம் நினைத்த மாதிரி தன் மகன் இல்லை என்று பல அப்பாக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு சின்னதாக ஒரு விடை கிடைக்கும் என்று இந்த படத்தை நாங்கள் நம்புகிறோம். இப்போது இருக்கக்கூடிய காலச் சூழலில் நல்லது செய்வதை விட  நல்லது நினைத்தாலே போதும் என்ற கட்டத்தில் தான் அனைவருமே இருக்கிறோம். நல்ல படைப்புகளை ரசிகர்கள் என்றுமே கைவிட்டது கிடையாது.

பணத்தை தாண்டி எத்தனை பேருடைய மனதை கொள்ளை அடிப்பது என்பது தான் முக்கியம்.  சினிமாவில் ஒரு நாள் வரும் அன்று இது போன்ற படங்கள் தான் நிலைத்து நிற்கும் . கமர்சியல் படங்கள் எல்லாம் தூக்கி அடிக்கப்படும். அதை நோக்கி தான் நகர்ந்து கொண்டு இருக்கிறோம் என கூறியுள்ளாா்.

மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் நகைச்சுவை நடிகர் செந்தில்!

MUST READ