Homeசெய்திகள்சினிமாஅட்லீயை சந்தித்த சிவகார்த்திகேயன்.... புதிய படம் தொடர்பான பேச்சுவார்த்தை?

அட்லீயை சந்தித்த சிவகார்த்திகேயன்…. புதிய படம் தொடர்பான பேச்சுவார்த்தை?

-

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் அட்லீயை சந்தித்து பேசி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.அட்லீயை சந்தித்த சிவகார்த்திகேயன்.... புதிய படம் தொடர்பான பேச்சுவார்த்தை?

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அந்த வகையில் இவர் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார். அதாவது வெற்றி பட இயக்குனர்களுடன் கைகோர்த்து தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்கிறார் சிவகார்த்திகேயன். அதன்படி ஏற்கனவே ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இது தவிர சிபி சக்கரவர்த்தி, விநாயக் சந்திரசேகரன், வெங்கட் பிரபு ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் பிரபல இயக்குனர் அட்லீயை நேரில் சந்தித்து பேசி உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது அட்லீயும் சிவகார்த்திகேயனும் நண்பர்களாக இருந்தாலும் இந்த சந்திப்பு இவர்களது புதிய படம் தொடர்பாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.அட்லீயை சந்தித்த சிவகார்த்திகேயன்.... புதிய படம் தொடர்பான பேச்சுவார்த்தை? ஏற்கனவே இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து பாலிவுட்டிலும் நுழைந்து ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் ரூ. 1000 கோடியை தட்டி தூக்கினார். அடுத்ததாக அட்லீ என்ன படம் இயக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில் தான் சிவகார்த்திகேயன், அட்லீ கூட்டணியிலான் புதிய படம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என புதிய தகவல் வெளிவந்துள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ