இந்தியன் பிரீமியர் லீக் 2025-ன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி கேகேஆர்அணியி சொந்த மைதானமான ஈடன் கார்டர் மைதானத்தில் நடைபெறுகிறது. ஆனால் இந்தப் போட்டியின்போது மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தாவில் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையின்படி, பலத்த காற்றுடன் மின்னல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 24 மணி நேரமாக கொல்கத்தாவில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஈடன் கார்டன்ஸ் மைதானம் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. குறிப்பாக மார்ச் 22 இன்று, வானிலை மிகவும் மோசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்சிபி – கேகேஆர் அணிகளுக்கு இடையிலான போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்கும். இந்தப் போட்டியின் போது மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படிறது.
கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் பிற்பகல் வரை இடி, மின்னலுடன் கூடிய தொடர் மழை பெய்யும் என்றும், பலத்த காற்று வீசும் என்றும் அக்குவெதர் அறிக்கை தெரிவிக்கிறது.இதனால், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். ஐபிஎல் 18வது சீசன் தொடங்குவதற்கு முன்பு தொடக்க விழா நிகச்சிகளம் நடைபெற உள்ளது. இந்நிலையில் மழையால் நெருக்கடியின் மேகங்கள் மைதானத்தில் மீது சூழ்ந்துள்ளன.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள்: குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), அங்கிரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ராமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, ஸ்பென்சர் ஜான்சன், வைபவ் அரோரா, ரஹ்மானுல்லா குர்பாஸ், மனிஷ் பாண்டே, மொயீன் அலி, அன்ரிச் நார்ட்ஜே, ரோவ்மன் பவல், அனுகுல் ராய், மயங்க் மார்கண்டே, சேதன் சகாரியா, லவ்னித் சிசோடியா.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள்: விராட் கோலி, பிலிப் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதர் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், டிம் டேவிட், க்ருணால் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள், ஸ்வப்னில் சிங், லுங்கி நிகிடி, ரொமாரியோ ஷெப்பர்ட், மனோஜ் பண்டாகே, ராசிக் தர் சலாம், நுவான் துஷாரா, ஜேக்கப் பெத்தேல், சுயாஷ் சர்மா, மோஹித் ரதி, ஸ்வஸ்திக் சிகாரா, அபிநந்தன் சிங்.