spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஐபிஎல் முன்னிட்டு நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் சேவை

ஐபிஎல் முன்னிட்டு நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் சேவை

-

- Advertisement -

சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டியை முன்னிட்டு இன்று நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ இரயில்கள் நீடிக்கப்படுகிறது!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மெட்ரோ நிர்வாகம் இணைந்து சென்னையில் நடைபெற உள்ள 16 வது ஐ.பி.எல் போட்டிகளை ரசிகர்கள் கண்டு களிக்க சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

ஐபிஎல் முன்னிட்டு நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் சேவை

we-r-hiring

16வது ஐபிஎல் போட்டிகளில் சென்னையில் நடைபெறும் போட்டிகள் அன்று மட்டும் ரசிகர்கள் சிரமின்றி பயணிக்கவும் நள்ளிரவு 1 மணி வரையில் ரயில்கள் நீடித்து இயக்கப்படுகிறது.

மேலும் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சேப்பாக்கம் மைதானம் வரையில் மெட்ரோ பயணிகளுக்கு இலவச சிற்றுந்துகளை இயக்கவும் மெட்ரோ நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிலையில் இன்று சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோத உள்ளது. எனவே இன்று நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் தொடங்கும் இந்த திட்டம் அடுத்து சென்னையில் நடைபெற உள்ள அனைத்து போட்டிகளுக்கும் இந்த சலுகைகள் வழங்கப்பட உள்ளது.

MUST READ