தனுஷின் D56 பட அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். அந்த வகையில் இவர் குபேரா, தேரே இஷ்க் மெய்ன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இட்லி கடை படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார் தனுஷ். இதற்கிடையில் இவர் அஜித்தை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு நடிகராகவும் இயக்குனராகவும் செம பிசியாக ஓடிக்கொண்டிருக்கும் தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி, விக்னேஷ் ராஜா, தமிழரசன் பச்சமுத்து ஆகியோரின் இயக்கத்தில் தனது அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இது தவிர மாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளார் எனவும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. அதாவது ஏற்கனவே இந்த கூட்டணியில் கர்ணன் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. எனவே இவர்களது கூட்டணியில் உருவாகும் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்க்கும் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் தனுஷின் 56வது படத்தை மாரி செல்வராஜ் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது மேலும் இது தொடர்பான அறிவிப்பு போஸ்டரை பார்க்கும்போது D56 படமானது வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் ஹாரர் கதை போல் தெரிகிறது. இருப்பினும் இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.