தற்போது தமிழகத்தில் பேசுபொருளாக இருப்பது கலாஷேத்ரா கல்லூரி தான். இந்தப் கல்லூரியில் பெண்கள் உடல் ரீதியாக பாலியல் துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்களை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று பல்வேறு தரப்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தற்போது இந்த விவகாரத்தில் கலாஷேத்ரா கல்லூரிக்கு ஆதரவாக பேசி நெட்டிசன்கள் வலையில் சிக்கியுள்ளார் நடிகை அபிராமி. ஆம், நம்ம பிக்பாஸ் அபிராமி தான்.

“நானும் இந்த கல்லூரியில் தான் படித்தேன். 89 ஆண்டுகளாக இந்த கல்லூரி செயல்பட்டு வருகிறது. இது போன்ற ஒரு விஷயம் இங்கு நடக்கவில்லை. வேண்டுமென்றே சிலர் அவதூறாக பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள். இந்த கல்லூரியின் இயக்குனர் ரேவதி இப்போது தான் பணியில் சேர்ந்துள்ளார். ஆனால் 10 வருடங்களாக இவ்வாறு நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இப்படி இருக்கையில் ரேவதியிடம் எந்த கருத்தும் கேட்காமல் அவரை குற்றம் சாட்டுவது மிகவும் தவறான ஒன்று. மேலும் மாணவர்களும் உண்மை தெரியாமல் பொய்யான தகவலை பரப்ப வேண்டாம்” என்று பேசியுள்ளார் அபிராமி.
மேலும் கலாக்ஷேத்ரா என்று சொல்ல வராதவர்கள் கூட அதுபற்றி பேசுகிறார்கள் என்றும் பேசியிருக்கிறாராம். இது ஒன்று போதுமே. தற்போது அபிராமியை கன்டென்ட் ஆக்கி வறுத்தெடுத்து வருகின்றனர் நம்ம நெட்டிசன்கள்!