நடிகர் நாகார்ஜுனா, பிரதீப் ரங்கநாதன் குறித்து பேசியுள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் கோமாளி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து லவ் டுடே திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து இந்திய அளவில் பிரபலமானது. இதைத்தொடர்ந்து இவர் நடித்திருந்த டிராகன் திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அடுத்தது வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் டியூட் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் கீர்த்திஸ்வரனின் இயக்கத்திலும் உருவாகியுள்ள இந்த படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் பிரதீப் ரங்கநாதனும், மமிதா பைஜுவும் ‘டியூட்’ பட ப்ரோமோஷனுக்காக நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
#Nagarjuna: Few Decades back #Rajinikanth sir came into Cinema & changed fate🌟. After Few Decades #Dhanush changed the pattern🫰. After few decades I’m seeing that for Pradeep🤝#PR: Those are Big words coming from you, it really means world for me❤️pic.twitter.com/qqQrFFnuYR
— AmuthaBharathi (@CinemaWithAB) October 13, 2025

அப்போது நாகார்ஜுனா, பிரதீப் ரங்கநாதனிடம், “சில தசாப்தங்களுக்கு முன்பு, ஒரு மனிதன் நெருப்பு போல சினிமாவிற்குள் வந்து சினிமாவின் தலைவிதியை மாற்றினார். அவர் பெயர் ரஜினிகாந்த். அதன் பிறகு மீண்டும் அதே நெருப்பு போல ஒரு மெலிந்த பையன் வந்தான். அவர் பெயர் தனுஷ். தற்போது அதே தீப்பொறியை பிரதீப் ரங்கநாதனிடம் பார்க்கிறேன்” என்று பாராட்டினார்.
இதற்கு பிரதீப், “இது உங்களிடம் இருந்து வரும் பெரிய வார்த்தைகள். உண்மையில் அது எனக்கு உலகம் போன்றது” என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.